search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணராயபுரத்தில் ரூ.41 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    X

    கிருஷ்ணராயபுரத்தில் ரூ.41 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    • குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சி பகுதிகளான பாம்பன்பட்டி முதல் சரவணபுரம் வரை உள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் எம்எல்ஏ இரா மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி–களில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி ரூபாய் 41 லட்சத்தில் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சி பகுதிகளான பாம்பன்பட்டி முதல் சரவணபுரம் வரை உள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கும்,

    முதலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி ஒத்தக்கடை முதல் பாரதி நகர் செல்லும் சாலை வரை சாலையை மேம்பாடு செய்யும் பணிக்கும் பூமி பூஜை நடந்தது. இதில் எம்எல்ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் தோகைமலை, நாடக்காப்பட்டி, நச்சலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும், பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் எம்எல்ஏ இரா மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

    விழாவில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சிஒன்றிய குழு தலைவர் சுபத்ராதேவி ரவிராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி–யன், குளித்தலை மெடிக்கல் மாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கருணாகரன், கள்ள பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×