search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை அமைக்கும் பணி"

    • மண்சாலையும் மழை நீரில் அடித்து சென்றது
    • வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 14 வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து இறந்தனர்.

    அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் அல்லேரியில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.

    அப்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

    இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்து. அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அளவிடும் பணிகள் முடிந்து வனத்துறைக்கு இடத்தினை வழங்கினர். இதன்பின் வனத்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் கடந்த மாதம் நடந்தே மலைப்பகுதிக்கு சென்று சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.

    கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது மண் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

    பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து, காயங்களுடன் செல்வது தொடர்கதையாக நடக்கிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையையாவது சீரமைத்து தர வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • திருச்சுழி அருகே நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி-மானூர் இடையே யான 3 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கு புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சரின் 2022-23 கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    அதனடிப்படையில் தற்போது நரிக்குடி - மானூர் இடையிலான சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைய உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறி யாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தார் சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பிரபா, சாலை ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிய சாலை அமைக்கும் பணிகள் 20 நாட்களில் தொடங்கப்படும்
    • சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், சாத்தமங்க லம், சருகுவலையப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆற்று ஓரத்தில் மண் சாலை உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயி கள் சில நாட்க ளுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்ட ரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகி யோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக பாதை உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கூறுகையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மேலூர் நகர் தலைவர் முகமது யாசின், ஒன்றிய செயலா ளர்கள் பாலு, ராஜராஜன், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, வேலாயுதம், பொது குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதாஅப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மங்காவரம் முதல் அப்பாவரம் வரையிலான சாலை, ரூ.34 லட்சம் மதிப்பில் பன்பாக்கம் காலனி சாலை அமைக்கப்படுகிறது.
    • தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் கவரப்பேட்டை தெலுங்கு காலனி சாலை, ரூ.37 லட்சத்தில் கவரப்பேட்டை ரெயில்வே நிலைய சாலை, ரூ.43 லட்சத்தில் பெருவாயல் ஊராட்சி நயினாங்குப்பம் சாலையும்,ரூ.1கோடியே 8 லட்சத்தில் மங்காவரம் முதல் அப்பாவரம் வரையிலான சாலை, ரூ.34 லட்சம் மதிப்பில் பன்பாக்கம் காலனி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செய லாளர் கே.இ. திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், ஜெயந்தி கெஜா, தி. மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலக ஒன்றிய பொறியாளர்கள் மணிமேகலை, செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் ஆய்வு
    • பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட் பட்ட குந்தாணிமேடு பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலை அமைக்கும் பணிகளை உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் ரேவதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 12.60 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

    செய்யாறு:

    செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மலைவையாவூர்- திருப்பதி தாங்கள் இடையே ரூ.1 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் வழக்கறிஞர் புரிசை எஸ்.சிவகுமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து சின்ன செங்காடு மற்றும் செங்காடு ஆகிய கிராமங்களில் 12.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார், திராவிட முருகன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
    • அமரவேல், நாகராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, புதுரெட்டியூரிலிருந்து வெள்ளியங்கிரி வரை தார்ரோடு புதுப்பிக்கும் பணிக்காக ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.

    கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாலர் சிவபிரகாஷம், ஊராட்சி மன்ற தலைவர் ஞானம் வடிவேல் துணை தலைவர் ஜோதி அம்புரோஸ், வார்டு உறுப்பினர்கள் ஆதிமூலம், புவனேஷ்வரி சிவா, ஜெகதீசன், வேடியப்பன் மு.தலைவர் மாதன், ஊர்கவுண்டர்கள் ராம தாஸ், அமரவேல், நாகராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

    • பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார்.
    • 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கட்டும்பணி மற்றும் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து பாண்டிச்சேரி வரை 29 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பணி ரூ.1,013 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. ஜானகிபுரம் சந்திப்பில் புதியதாகபூஜ்ஜியம் கி.மீட்டராக நிலையாக வைத்து 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி - சென்னை நெடுஞ்சா லையில், அதிக ப்படியான வாகன ங்கள் சென்று வருவதால் பாதுகா ப்பான பயணத்தை உறுதிசெய்தி டும் பொருட்டு, பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைத்திடவும், எதிர்வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைத்திடவும், வாகனங்கள் அதிகப்ப டியான வேகத்தில் செல்வ தனை கட்டுப்படுத்திடும் பொருட்டு தற்காலிக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட தலைக்கவசங்கள் வழங்கிடவும், பிரதிபலிக்கும் பட்டை உடைய ஆடைகளை அணிந்து பணியாற்றிடவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வதோடு, வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் சமயத்தில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் பதாகைகள் ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவவாறு அவர் கூறினார்.

    • சங்கராபுரம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு கிராவல் மண் திருடுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
    • மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ். நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை14-வது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ரூ.33 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேவையான கிராவல் மண்ணை ஒப்பந்ததாரர் குவாரிகளில் வாங்கா மல் கே.கே.நகரில் கட்டப்பட்டு ள்ள குடிநீர்தொட்டி பணியில் மிஞ்சிய மண்ணை இரவு நேரங்களில திருட்டுத்தனமாக அள்ளி வந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி கவுன்சிலர் கணபதி மற்றும் அந்தப்பகுதி மக்கள் சாலைப்பணியை நடக்க விடாமல் நிறுத்தினர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மருங்கிப்பட்டி ரமேஷ் என்பவர் கூறுகையில், அரசுக்கு சொந்தமான கிராவல் மண்ணை திருடுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் இருபுறமும் எந்திரங்களால் மண்ணை வெட்டி ஓரங்கள் அமைக்கின்றனர்.

    33 அடி சாலையில் 3 மீட்டர் மட்டுமே சாலை போடப்படுகிறது.ஓரங்களில் பள்ளமாக மண்ணை வெட்டி பயன்படுத்துவதால் சாலை குறுகிய சாலையாக மாறிவிடுகிறது.

    மேலும் வீடுகளுக்கும், பிளாட்டுகளுக்கும் முன்புறம் கால்வாய் போல் ஆகிவிடுகிறது. சாலை பணிக்கு தேவையான மண்ணை ஒப்பந்ததாரர் விலைக்கு வாங்கி அதனை பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தலையிட்டு கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், பொதுமக்கள் தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் எச்ச ரிக்கை விடுத்துள்ளோம்.சாலையின் இருபுறமும் தோண்டிய மண்ணை பரப்பிவிட்டு சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன். மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பிரதான சாலை கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.
    • தற்பொழுது உள்ளாட்சி சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 78- லட்சம் செலவில் சாலை அமைக்க பட உள்ள்து

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ ராமசமுத்திரம் ஊராட்சி காமராஜ் மண்டபத்திலிருந்து சின்னப்பள்ளிபாளையம் ஊராட்சி, பெரியப் பெரியபாளையம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பிரதான சாலை கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்பொழுது உள்ளாட்சி சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 78- லட்சம் செலவில் சாலை அமைக்க பூமி பூஜை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் பாபு என்கின்ற சத்தியமூர்த்தி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ம.மருததுரை காட்டுப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவசெல்வராஜ்,

    தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.தங்கவேல் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால ந.திருஞானம் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ். செல்வராஜ் தொட்டியம் பேரூராட்சி மன்றத் தலைவர் சரண்யாபிரபுசின்னப் பள்ளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி பெருமாள் துணைத்தலைவர் கே.குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த சாலையால் காட்டுப்புத்தூர், உன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம் சின்னப்பள்ளிபாளையம் பெரியப்பள்ளிபாளையம் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.


    தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் குண்டியாநத்தம், ஊராட்சிக்கு உட்பட்டது கருவேலம்பாடி, சின்ன கருவேலம்பாடி, மேட்டுவளவு கிராமங்கள். இந்த 3 கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக சாலை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நொச்சிமேடு கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும் இந்தபகுதி மக்கள் அவசரத்துக்கு கூட மருத்துவத்திற்கோ அத்தியாவசிய பொருட்களை வாங்க வர முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் சாலைகள் அமைத்து அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் சாலை வசதி வேண்டுமென்று பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நொச்சி மேடு முதல் கருவேலம்பாடி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 1 கோடியே 54 லட்சம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறையினர் இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க கூடாது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகு தார்சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகு 2022 ஜூலை மாதம் கருவேலம்பாடி கிராமத்திற்கு சாலை அமைக்க அதுவும் 2.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியது.

    இருந்தாலும் 21/2 கிலோமீட்டர் முதலில் சாலை பணியை தொடங்கி விடலாம் என்று ஊராகவளர்ச்சித் துறையினர் ஜூலை 15ஆம் தேதி உதயசூரியன் எம்.எல்.ஏ. வைத்து பூமி பூஜை போட்டு சாலை பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின் சாலை பணிகள் தொடங்கி ஜல்லி கொண்டுவரப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால்மீண்டும் வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான இடம் எது என்று முதலில் அளவீடு செய்து வனத்துறையிடம் காண்பித்து விட்டு அதன் பிறகு நீங்கள் சாலைகள் போட வேண்டும் என்று கூறி வனத்துறையினர் மீண்டும் சாலை பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு இப்போது தான் சாலை வசதி வருகிறது என்று நிம்மதியாக இருந்தனர் ஆனால் அதையும் தடுத்து நிறுத்தி உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

    • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை
    • விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டுகோள்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    இப்பணிகளை ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மேலும் சாலையாக அமைத்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டார்.

    ×