search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சல்மான்கான்"

    • நடிகர் சல்மான்கானின் உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது.
    • ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர்.


    சல்மான்கான்

    இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.
    • இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

    பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.


    சல்மான்கான் - ஜானி மாஸ்டர்

    இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சல்மானுடன் ஜானி மாஸ்டர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஜானி மாஸ்டர் சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    அட்லீ

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சில் 15-வது சீசனை கடந்து 16-வது சீசன் தொடங்கியுள்ளது.
    • இந்த சீசனையும் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார்.

    தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


    சல்மான்கான்

    ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    இதுதொடர்பாக 16-வது சீசன் அறிமுக விழாவில் நடிகர் சல்மான்கான் விளக்கமளித்துள்ளார். அதில், " "நான் ஆயிரம் கோடி சம்பளம் வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாமே. இந்த அளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகளும் அதிகமாகும்.


    சல்மான்கான்

    மேலும் இந்த செய்தி வருமான வரித்துறைக்கு கிடைக்கும். அவர்கள் வந்து சோதிக்கும் போது உண்மை வெளிவரும். இந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் சகோதரிடம் மும்பை போலீசார் இன்று விசாரணை நடத்தியதில், அவர் சூதாடியதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ArbaazKhan #IPL
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடைபெற்றது. ஐ.பி.எல். போட்டி தொடர்பாக மும்பையில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் (பெட்டிங்) நடந்ததை போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக சூதாட்ட தரகர்கள் 3 பேர் கடந்த 16-ந் தேதி டோம்புவிலியில் பிடிபட்டனர். அவர்கள் பெட்டிங்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து 18-ந் தேதி மேலும் 2 சூதாட்ட தரகர்களும், 29-ந் தேதி சோனு ஜலான் என்ற சூதாட்ட தரகரும் கைது செய்யப்பட்டனர். சோனு ஜலான் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்தி நடிகரும், பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் சல்மான்கானின் இளைய சகோதரருமான அர்பாஸ்கானுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

    சம்மனை தொடர்ந்து இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் இன்று காலை தானே போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் ஐ.பி.எல். பெட்டிங் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சீனியர் இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் அவரிடம் சூதாட்ட தரகர் சோனுவுடன் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.

    எத்தனை முறை சோனு மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டீர்கள், இருவருக்கும் உள்ள பண பரிவர்த்தனை என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் அர்பாஸ்கானிடம் கேட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டு 2.70 கோடி ரூபாய் இழந்ததாக அர்பாஸ்கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
    லக்னோ:

    விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த பிரவீன் தொஹாடியா சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியதோடு, குஜராத் அரசு தன்னை கொலை செய்ய பார்க்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை அடுத்து, ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொஹாடியா தொடங்கினார்.

    இந்நிலையில், இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சல்மான்கான் தயாரிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

    இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாக கூறி சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
    ×