search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்டை"

    • ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.
    • அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது28). ஊர்க்காவல் படை வீரர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் வண்ணார்பேட்டை-சந்திப்பு சாலையில் சென்ற போது ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவர் அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரம்மநாயகத்துடன் மோதலில் ஈடுபட்டது வீரவநல்லூர் அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த முத்துச்சரவணன் (32) என்பதும், தாக்குதல் சம்பவத்தில் பிரம்மநாயகம், முத்துச்சரவணன் ஆகியோர் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் பிரம்மநாயகம் முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது அவருக்கும் முத்துச்சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வரும் பிரம்மநாயகம் சம்பவத்தன்று சாலையில் வந்த போது அவர்களுக்கடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை ஜவுளிக்கடை காவலாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில் பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    • கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
    • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.

    நீடாமங்கலம்:

    ஆடுதுறை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி (வயது 24). இத்தம்பதிகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வசித்து வந்த நிலையில் ராஜகுரு அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இந்துமதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு ராஜகுரு அழைத்து வந்துள்ளார். இதனிடையே இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×