search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில்"

    • கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
    • தினக்கூலி பெறும் தொழிலாளர்களிடம் ஆண்டுக்கு 2 முறை தொழில்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது.

    கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது தலைமை தாங்கினார். எல்.பி.எப் தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் செல்வராஜ், கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வினோத்குமார், கேசவ முருகன், பொருளாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் போஜராஜன், ஐ.என்.டி.யு.சி கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இதில் தினக்கூலி பெறும் தொழிலாளர்களிடம் ஆண்டுக்கு 2 முறை தொழில்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இதை கண்டித்து வருகிற 18-ந் தேதி வால்பாறையில் உள்ள வாட்டர்பால்ஸ் பகுதியில் இருக்கும் குரூப் அலுவலகம் முன்பும், 19-ந் தேதி கருமலை எஸ்டேட் பகுதியிலும், 20-ந் தேதி சோலையாறு பகுதியிலும், 23-ந் தேதி கோவை ஏ.டி.டி காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர் சங்க அலுவலகம் முன்பும் மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அத்துடன் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படுகிறது.

    மேலும் அரசு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.352 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த கூலியாக ரூ.425-ஐ வழங்க வேண்டும். அதற்கான இறுதி ஆணை வரும் வரை தனியார் தேயிலை தோட்டங்களில் தினக்கூலியாக வழங்கப்படுவது போன்று அரசு தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.409.83-யை வழங்க வேண்டும்.

    தொழிற்சங்க கூட்டமைப்பு போராடி ஒப்பந்தம் ஏற்படுத்தியன் பேரில் தனியார் தேயிலை தோட்ட ஆண்-பெண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டதால் ரூ.32 ஆயிரம் நிலுவை தொகை வழங்கப்பட்டது. ஆனால் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அது இழப்பாக உள்ளது. எனவே கூலியை உயர்த்தி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் நிர்வாகிகள் வீரமணி, தங்கவேல், செந்தில்குமார், கவுன்சிலர் மணிகண்டன், பி.டி.எம்.செந்தில்முருகன், எச்.எம்.எஸ்.ஜெபஸ்டின், மாஞ்சோலை பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உதயகுமார் தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்
    • இதனை உண்மை என நம்பிய சதீஷ் ஆன்லைன் முறை யில் இந்த நபர் கொடுத்த வங்கி கணக் கில் பணம் அனுப்பினார்.

    கோவை:

    கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 60). தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் உணவு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ஒருவர் ஆன்லைன் தகவல் அடிப்படையில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அந்த நபர் கொப்பரை தேங்காய் வேண்டும் என ஆர்டர் கொடுத்து 2 டன் எடையிலான ரூ. 2.42 லட்சம் மதிப்பிலான கொப்பரை வாங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து உதயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (63). குளியலறை பிட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பாரத் பெட ்ரோலியம் நிறுவனத்தில் பாத் ரூம் பிட்டிங் செய்து தரவ ேண்டும்.

    இதற்கு நீங்கள் ரூ. 2.46 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும். வேலை முடிந்த பின்னர் பில் மற்றும் டெ பாசிட் தொகை வழங்கப்படும் என பேசி னார். இதனை உண்மை என நம்பிய சதீஷ் ஆன்லைன் முறை யில் இந்த நபர் கொடுத்த வங்கி கணக் கில் பணம் அனுப்பினார். ஆனால் பணத்தைப் பெற்ற அந்த நபர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. ஏமாற் றப்பட் டதை அறிந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய் யப்பட்டு விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளனர்.
    • பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது தமிழக அரசு உத்தரவு படி கோவை மாவட்டத்தில் 4-வது அனைத்து மகளிர் போலீஸ் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் உட்கோட்டத்தில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் தொடர்பான புகார்களுக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒரு வருடத்தில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மொத்தம் 1200 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 700 மனுக்களும் (58 சதவீதம்) பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளில், 18 வழக்குகளும் (44 சதவீதம்) மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய உட்கோட்டத்திற்கு தொடர்புடையதாகும்.

    மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் இருந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது. தற்போது பொதுமக்கள் வசதிக்காகவும், மக்கள் பயன்பெறும் வகையிலும் தங்களது பிரச்சினைகளை உடனுக்குடன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க மேட்டுப்பாளையத்தில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹ்ரிபா பர்வீன், துணைத்தலைவர் அருள் வடிவு டிஎஸ்பி பாலமுருகன், பயிற்சி டி.எஸ்பி ஜாபர் சித்திக், காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கன்னி உதய ரேகா, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், ஆனந்தக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தற்போது சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இம்மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் லதா, மாரி செலின், பிரேமலதா, ஜோதி, ஸ்வேதா, இந்து பிரியா, ஜெபிஷா மற்றும் சுஷ்மிதா ஆகியோர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • வழி மறித்து பணம் கேட்டார்.
    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார்

    கோவை:

    கோவை புலியகுளம் அம்மன் குளம் 2-வது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21). இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு அபிஷேக் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். பாப்பநாயக்க ன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அவரது நண்பர் கோகுலகிருஷ்ணன் (23) என்பவர் மறித்து அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டார்.

    அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் அபி ஷேக்கின் செல்போனை பிடுங்கி வைத்து கொ ண்டார். அவர் திருப்பி கேட்டபோது, கோகுல கிருஷ்ணன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடபட்டார். இதில் அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதில் அபிஷேக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து அபிஷேக் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    கோவை மசக்காளி பாளையம் நீலியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அருண்குமார் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக நீலியம்மன் கோவில் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் குடிபோதையில் அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் அருண்குமாரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமாரை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×