search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மார்க்கெட்"

    • கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர்.
    • மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

    கோவை,

    நாளை தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சாமி படங்களுக்கு மாலை அணிவித்து, கனிகள் உள்பட பல்வேறு பொருட்களை படைத்து சாமி கும்பிடுவது வழக்கம்.

    இதையடுத்து பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பூஜைக்கு தேவையான பழம், பூக்கள் வாங்கி வருகின்றனர்.

    கோவை டி.கே.மார்க்கெட்டிற்கு இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகமாக வந்தனர். அவர்கள் அங்கு புத்தாண்டுக்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான பழங்கள், காய்கனிகள் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்கினர்.

    மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொண்டனர்.

    இதேபோல் கோவை பூமார்க்கெட்டில் காலை முதலே பூக்கள் விற்பனை களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தமிழ்புத்தாண்டை யொட்டி கோவையில் பழங்கள், பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

    கோவை மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    மாம்பழம்(செந்தூரம்)-ரூ.120, மல்கோவா மாம்பழம்-ரூ.180, சாத்துகுடி-ரூ.70, கொய்யா-ரூ.80, மாதுளை-ரூ.180, ஆரஞ்சு-ரூ.100, திராட்சை-ரூ.100, ஆப்பிள்-ரூ.200, அன்னாசி-ரூ.60, எலுமிச்சை-ரூ.120க்கு விற்பனையானது.

    மல்லி பூ-ரூ.800, செவ்வந்தி-ரூ.320, தாமரை 1-ரூ.10, ரோஜா(ரெட்)-ரூ.160, ரோஜா(கலர்)-ரூ.240, அரளி-ரூ.320, சம்பங்கி-ரூ.240, முல்லை-ரூ.800, கனகாம்பரம்-ரூ.400, செண்டுமல்லி-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    ×