search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் நிலம் மீட்பு"

    • ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
    • கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

    இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இடத்தை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அதிகாரிகள் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் 7500 சதுர அடி உள்ளது.
    • தரை தளத்தில் உள்ள மேலும் 6 கடைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    சென்னை, அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் 7500 சதுர அடி உள்ளது. இது தனியார் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

    இவர் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விட்டிருந்ததாலும் இந்து சமய அறநிலையத்துறை சென்னை இணை ஆணையர் உத்தரவின்படி, வருவாய்துறை மற்றும் போலீசார் உதவியுடன் அக்கட்டிடத்தின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    தரை தளத்தில் உள்ள மேலும் 6 கடைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் அதனையும் தீர்ப்பின்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.

    இந்த நடவடிக்கையின்போது சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் காளியப்பன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள 15 கிரவுண்டு மனை ஆக்கிரமிக்கப்பட்டதாக தெரிகிறது.
    • சொத்தை குத்தகைக்கு வழங்கிடும் வகையில் பொது ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலின் மேம்பாட்டுக்கு செலவிடப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள 15 கிரவுண்டு மனை ஆக்கிரமிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அதனை மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும்.

    இந்த சொத்து மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இந்த சொத்தை குத்தகைக்கு வழங்கிடும் வகையில் பொது ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலின் மேம்பாட்டுக்கு செலவிடப்படும். கோவில் சொத்து மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன் மற்றும் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

    • புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார்.
    • மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பல நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

    கரியமாணிக்கப்புரத்தில் உள்ள முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் நாகர்கோவிலை அடுத்த வேதநகர் பகுதியில் ஹவாய் நகர் 9-வது தெருவில் உள்ளது.

    இதனை புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார். மொத்தம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அன்னக்கிளி எந்த விவசாயம் செய்யாமல் அப்படியே போட்டு இருந்தார்.

    இந்நிலையில் அறநிலைத்துறைக்கு அன்னக்கிளி குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் வைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் சிறப்பு தாசில்தார் சஜித், முப்பிடாரி அம்மன் கோவில் செயல் அலுவலர் ரகு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் இன்று அந்த நிலத்தை மீட்டனர்.

    அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.

    • ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் குளம் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் உள்ளது.

    இந்த குளத்தின் பகுதியை சிலர் ஆக்கிரமித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் என். பாஸ்கரன், தாசில்தார் காளியப்பன், அதிகாரிகள் சிவப்பிரகாசம், தனசேகரன் இன்று காலை கோவில் குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.

    அவர்களிடம் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • கோவிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
    • நிலங்கள் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனியை அடுத்த தாளையூத்து கிராமத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த அங்கா ளம்மன் கோவிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையூத்து கிராமத்தில் அங்காளம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.

    அதே போல் வேலு சமுத்திரம் செங்கழுநீரம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன. இதையடுத்து திண்டுக்கல் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் தக்கார் ராமநாதன், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) விஜயலட்சுமி, பழனி சரக ஆய்வாளர் கண்ணன், வேடசந்தூர் சரக ஆய்வாளர் ரஞ்சினி, ஆய்வர் அலுவலக உதவியாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் நிலத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதன்படி தாளையூத்து கிராமம் சர்வே எண் 860/1 இல் 7.05 ஏக்கர், சர்வே எண். 860/2 இல் 7.18 ஏக்கர் மற்றும் வேலுசமுத்திரம் கிராமம் சர்வே எண் 32 மற்றும் 31/10 இல் 11.72 ஏக்கர் என மொத்தம் 25.95 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தி எச்சரிக்கை பதாகைகளை வைத்தார்.

    ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலங்கள் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×