search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழி இறைச்சி கழிவு"

    • இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை.
    • கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவரான ராயபுரம் அலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    முறைப்படி இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை. கடைகளில் மாநகராட்சி ஊழியர்களே நாங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் கழிவுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். கோழி இறைச்சியில் இருந்துதான் அதிக அளவில் கழிவுகள் குவியும். மற்றபடி ஆட்டு இறைச்சியில் இருந்து அதிக கழிவுகள் குவிவதில்லை.

    ஏனென்றால் ஆட்டிலுள்ள உறுப்புகளில் அனைத்துமே பயன்படுபவைதான். கோழி இறைச்சி கழிவுகளை சில கம்பெனிகள் வாங்கி சென்று விடுகின்றன. இறால் பண்ணை மீன் வளர்ப்பு போன்ற பண்ணைகளில் இருந்து வருபவர்கள் கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    இதே போன்று மாநகராட்சி நிர்வாகமும் சென்னையில் இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கி விடலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

    ×