search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shrimp farm"

    • இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை.
    • கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவரான ராயபுரம் அலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    முறைப்படி இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை. கடைகளில் மாநகராட்சி ஊழியர்களே நாங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் கழிவுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். கோழி இறைச்சியில் இருந்துதான் அதிக அளவில் கழிவுகள் குவியும். மற்றபடி ஆட்டு இறைச்சியில் இருந்து அதிக கழிவுகள் குவிவதில்லை.

    ஏனென்றால் ஆட்டிலுள்ள உறுப்புகளில் அனைத்துமே பயன்படுபவைதான். கோழி இறைச்சி கழிவுகளை சில கம்பெனிகள் வாங்கி சென்று விடுகின்றன. இறால் பண்ணை மீன் வளர்ப்பு போன்ற பண்ணைகளில் இருந்து வருபவர்கள் கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    இதே போன்று மாநகராட்சி நிர்வாகமும் சென்னையில் இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கி விடலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • தமிழக அரசு இறால் பண்ணையாளர்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும்.
    • திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட முத்துப்பேட்டையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் இறால் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை இணைந்து இறால் வளர்ப்பின் வளரச்சி தொழில்நுட்பங்கள் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்த இறால் விவசாயி கள் கருத்தரங்கு கூட்டத்தில், இறால் வளர்பாளர்களிடையே சமீபத்திய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சந்தையில் கிடைக்கும் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கமாகும்.

    தமிழக அரசு இறால் பண்ணையாளர்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து அவர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையின் மூலம் நான்கு மீன் சில்லரை வியாபாரிகளுக்கு மானியத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி பொருத்திய இருசக்கர வாகனத்தினை வழங்கினார்.

    இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கீர்த்தனா மணி, கோட்ட பொறியாளர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நாகப்பட்டினம் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் உதவி இயக்குநர் வனச்சரகர் முத்துப்பேட்டை மற்றும் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • இந்த இடத்திற்கு ஒரு சிலர் அடிக்கடி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
    • பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று இறால் பண்ணை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் கடற்கரை ஓரம் தனி நபருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணை உள்ளது. இந்த இடத்திற்குளு ஒரு சிலர் அடிக்கடி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்பொழுது இறால் பண்ணையின் உரிமையாளர்கள் நீங்கள் கேட்கும் பணத்தை அடிக்கடி கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கடலில் இருந்து இறால் பண்ணைக்கு தண்ணீர் எடுக்கும் குழாய் பகுதியில் சிகப்பு நிறமான ரசாயன பவுடரை கலந்துள்ளனர்.

    இதனைப் பார்த்த இறால் பண்ணையின் நிர்வாகத்தினர் போலீசார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். இந்த ரசாயன பவுடர் கலந்த தண்ணீரை இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொட்டிகளுக்கு சென்றால் அனைத்து இறால் குஞ்சுகளும் இறந்துவிடும். இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று இறால் பண்ணை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

    ×