பணம் தராததால் ஆத்திரம்: இறால் பண்ணையில் ரசாயன பவுடரை கலந்த மர்ம நபர்கள்

இந்த இடத்திற்கு ஒரு சிலர் அடிக்கடி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று இறால் பண்ணை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
இறால் பண்ணையில் ரசாயனபவுடர் கலந்து உள்ள காட்சி. 
இறால் பண்ணையில் ரசாயனபவுடர் கலந்து உள்ள காட்சி. 
Published on

விழுப்புரம்:

மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் கடற்கரை ஓரம் தனி நபருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணை உள்ளது. இந்த இடத்திற்குளு ஒரு சிலர் அடிக்கடி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்பொழுது இறால் பண்ணையின் உரிமையாளர்கள் நீங்கள் கேட்கும் பணத்தை அடிக்கடி கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கடலில் இருந்து இறால் பண்ணைக்கு தண்ணீர் எடுக்கும் குழாய் பகுதியில் சிகப்பு நிறமான ரசாயன பவுடரை கலந்துள்ளனர்.

இதனைப் பார்த்த இறால் பண்ணையின் நிர்வாகத்தினர் போலீசார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். இந்த ரசாயன பவுடர் கலந்த தண்ணீரை இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொட்டிகளுக்கு சென்றால் அனைத்து இறால் குஞ்சுகளும் இறந்துவிடும். இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று இறால் பண்ணை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com