search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடீசுவரர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 7,500 கோடீசுவரர்கள் புலம்பெயர்ந்தார்கள்.
    • கடந்த 10 ஆண்டுகளில் கோடீசுவரர்கள் புலம் பெயர்ந்து செல்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    புதுடெல்லி:

    உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் பற்றி ஹென்லி நிறுவனம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் கூறி இருப்பதாவது:-

    2023-ம் ஆண்டில் ஒரு மில்லியன் டாலர், அதாவது ரூ.8.21 கோடி அல்லது அதற்கு அதிகமான நிகர சொத்து மதிப்புடைய 6,500 பேர் இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு புலம் பெயர்வார்கள். இதையடுத்து இந்தியாவில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

    அதிக நிகர சொத்து மதிப்பை கொண்ட நபர்கள் அதிக அளவில் நாட்டை விட்டு புலம் பெயரும் நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்த ஆண்டு 13,500 கோடீசுவரர்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    கோடீசுவரர்களை அதிகம் இழக்கும் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த போதும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 7,500 கோடீசுவரர்கள் புலம்பெயர்ந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு அதைவிட 1,000 பேர் குறைவாகவே புலம் பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் கோடீசுவரர்கள் புலம் பெயர்ந்து செல்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 1,22,000 கோடீசுவரர்கள் உலக அளவில் புலம் பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2024- ம் ஆண்டு 1,28,000 கோடீசுவரர்கள் உலக அளவில் புலம் பெயர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×