search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்"

    • தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் நாளை நடைபெற உள்ளது.
    • பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.

    கோவை

    தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றுகட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில்கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணிதீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து கோவை மாவட்டத்தில், 35-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.

    இந்த பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பா் 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் 35-வது கொரோனா தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் நாளை நடைபெற உள்ளது.

    இதில் தகுதியான நபா்கள் இரண்டாம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    • கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், நகர்ப்புறத்தில் 339 முகாம்களும் அமைக்கப்பட்டது.
    • 2 லட்சத்து 14 ஆயிரத்து 24 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

    கோவை:

    தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில்கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவை மாவட்டத்தில், 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது.

    இதற்காக, மாவட்டம் முழுவதும் 1,529 இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், நகர்ப்புறத்தில் 339 முகாம்களும் அமைக்கப்பட்டது.

    இந்த மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. கோவை மாவட்டத்தில் இது வரை 18 வயதுக்கு மேற்பட் டவர்கள் 28 லட்சத்து 88 ஆயி ரத்து 241 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 26 லட்சத்து 46 ஆயிரத்து 998 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.

    மேலும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 24 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

    15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 1 லட்சத்து 40ஆயிரத்து 239 பேருக்கு முதல்தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 400 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 90 ஆயிரத்து 250 பேருக்கு முதல்தவணை தடுப்பூசி, 62,619 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    ×