search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வைரஸ்"

    • பரோல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும்.
    • கொரோனா பரவலை தடுக்கவே கைதிகள் பரோலில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

    மும்பை:

    நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது, அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடம் பிடித்தது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் அதிக பாதிப்புகள் காணப்பட்டன.

    இதனை தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த, குற்றவாளிகள் என கோர்ட்டு தண்டனை விதித்த கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட கைதிகளில் பலர், பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் பரோல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். அதன்படி, பலர் சிறைக்கு திரும்பினர்.

    ஆனால், அவர்களில் சிலர் அப்படி செய்யவில்லை. பரோல் காலம் நிறைவடைந்தும் சிறைக்கு திரும்பி வராமல் இருந்து உள்ளனர். இதனை அடுத்து, மும்பை போலீசார் சமீபத்தில் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன்பின், அவர்களை கைது செய்து வந்து உள்ளனர். இதன்படி, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். சிறைகளில் நெருக்கடியை தவிர்க்கவே, கொரோனா பரவலை தடுக்கவே கைதிகள் பரோலில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

    • முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    • நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

    நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.

    பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திடல்வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

    அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால்

    கொரோனா நோய்தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைவலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    • காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களை அருகில் உள்ள நகர்ப்புற அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
    • 3-வது அலையில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்களில் 3-ல் ஒரு பங்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருபவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்.

    கொரோனா அறிகுறி தெரியவந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

    தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொற்று உறுதியானவர்களின் வீடு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை மாநகராட்சி சுகாதாரத்துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.

    3-வது அலையில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்களில் 3-ல் ஒரு பங்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வந்த 2 ஆயிரத்து 297 பேரில் 68 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது.

    மேலும் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு லேசான அறிகுறி அல்லது மாறுபட்ட புதிய அறிகுறி தென்படுகிறது.

    சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசன் கூறும்போது, தொண்டை வலி, இருமல், சுவையின்மை மற்றும் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் முன் கூட்டியே தேவையான சிகிச்சை மற்றும் தனிமைப் படுத்த முடியும் என்றார்.

    தற்போது வணிக நிறுவனங்களில் காய்ச்சல் இருப்பவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

    அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, மண்டலங்களுக்கு மாதிரி கலெக்‌ஷனுக்காக இரண்டு வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் களத்தில் நேரில் சென்று ஆய்வு மேற் கொள்ளும் போது, காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களை அருகில் உள்ள நகர்ப்புற அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    அதே நேரம் அளவுக்கு அதிகமான பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் நேரடியாக மாதிரிகள் சேகரிக்க வாகனங்களில் அந்த இடங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    ×