search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி சாவு"

    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அறுமுகம் (வயது 73). இவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணை பிறகு ஆறுமுகத்திற்கு, கடந்த 2019-ம் ஆண்டு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அதன்படி அவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். வயது முதுமை காரணமாக ஆறுமுகத்திற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயில் மருத்துவமனை யிலேயே சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி உடல் நிலை மோசமானதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுநீரகம் செயல் இழந்து, மூச்சடைப்பு ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    தர்மபுரி மாவட்டம், கொங்கராம்பட்டி யை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் பொம்மிடி போலீசார் ரவியை கைது செய்தனர்.

    வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கடந்த ஒரு ஆண்டாக ஜெயிலில் உள்ள ரவிக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் செயல் இழந்தது.

    சிறுநீரகம் செயல் இழப்பிற்கு ரவி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ரவியை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை சிறையில் கைதி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த முனியன் மகன் முருகன் (44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×