வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயில் கைதி சாவு

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார்.
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயில் கைதி சாவு
Published on

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அறுமுகம் (வயது 73). இவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணை பிறகு ஆறுமுகத்திற்கு, கடந்த 2019-ம் ஆண்டு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதன்படி அவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். வயது முதுமை காரணமாக ஆறுமுகத்திற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயில் மருத்துவமனை யிலேயே சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி உடல் நிலை மோசமானதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com