search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி அல்ட்ரா டேஸ்"

    • சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
    • ரூ. 5 ஆயிரம் அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் "கேலக்ஸி அல்ட்ரா டேஸ்" சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

    கேலக்ஸி அல்ட்ரா டேஸ் விற்பனையின் கீழ் பயனர்கள் கேலக்ஸி S24 அல்ட்ரா அல்லது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல்களை வாங்கும் போது ரூ. 12 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் S சீரிஸ் மாடல்களை கொடுத்து கூடுதலாக ரூ. 5 ஆயிரம் அப்கிரேடு போனஸ் பெறலாம்.

    இந்திய சந்தையில் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சிறப்பு சலுகை விவரங்கள்:

    கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை வாங்கும் S சீரிஸ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 17 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. மற்ற சாதனங்களை பயன்படுத்துவோர் ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலை வாங்கும் S சீரிஸ் பயனர்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்களும், மற்ற சாதனங்களை பயன்படுத்துவோருக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி S23 அல்ட்ரா அல்லது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல்களை வாங்குவோருக்கு 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி S24 சீரிஸ் வாங்குவோர் கேலக்ஸி வாட்ச் 6 மாடலுக்கு ரூ. 12 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும்.

    ×