search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேன் வில்லியம்சன்"

    • எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது.
    • டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்ல உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார். இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வில்லியம்சன் தொடர்கிறார். டிரண்ட் போல்ட் மற்றும் கப்திலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நம்புகிறேன்.

    இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் 3-வது முறையாக சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இந்த தலைமுறையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக  கருதப்படுகிறார். இவரது தலைமையில் நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த சீசனில் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 925 ரன்களும், ஒருநாள் போட்டியில் 838 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 332 ரன்களும் அடித்துள்ளார்.

    ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. மிக உயரிய விருதான சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை இந்த முறை கேன் வில்லியம்சன் வென்றுள்ளார்.

    ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளார். இதன்மூலம் மூன்று முறை சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராஸ் டெய்லர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளார்.
    ×