search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு"

    • ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய ஊட்டி கிளையின் ஆண்டு விழா நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
    • ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி:

    ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய ஊட்டி கிளையின் ஆண்டு விழா நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை மற்றும் சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் ராமலிங்கா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் ஸ்ரீதா், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சரவணன், நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் முத்து சிதம்பரம், குன்னூா் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் குமார சுந்தரம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    • பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரைமண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர், சிறுபான்மை யினர்களுக்கு மிக குறைந்த வட்டியிலும், மாதத் தவணையை தவறாமல் செலுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடனும், மகளிர் சுயஉதவிக் குழுக்கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அச்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்ட விவசாயிகள் பயிர்க்கடன் பெற கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்கள் பெற்று பயனடையலாம்.

    உறுப்பினரல்லாத விவசாயிகள், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத் தொகை நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களைப் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பயிர்க்கடன் வழங்கலில் சேவை குறைபாடுகள் இருந்தால் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரை (7338721101), பொதுமேலாளரை (8300003601), உதவிபொது மேலாளரை(விவசாயம்) (8300003603) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்/கணவனால் கைவிடப்பட்டவர்கள், தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் கடன் பெறுவதற்கு புதிய உறுப்பினர்களாகச் சேர்ந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை குறைபாடு களுக்கு மண்டல இணைப்பதிவாளரை (7338721100), மதுரை சரக துணைப்பதிவாளரை (7338721103), உசிலம்பட்டி சரக துணைப்பதிவாளரை (7338721104) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×