search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதுறை நுழைவு வாயில்"

    • பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது.

    பவானி:

    பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    தற்போது கோவிலுக்கு வெளியூர், வெளி மாநில அய்யப்ப பக்தர்கள் கூடு துறைக்கு அதிகளவு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வதால் கோவில் பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் குப்பைகளும் அதிக அளவில் காணப்படு கிறது.இந்த குப்பைகளை கோவில் பணியாட்கள் அவ்வபோது சுத்தம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு- பவானி ரோடு கோவிலை யொட்டி உள்ள பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும பொதுமக்கள் சிலர் கோவில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து வருகிறது.

    இதையடுத்து பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகை மூட்டத்தால் அவதி அடைந்து வருகின்ற னர்.

    எனவே பவானி கூடுதுறை நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக்கு தீ வைப்ப வர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்‌பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×