search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிக்க சென்ற"

    • கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில், கங்காதேவி சம்பவத்தன்று காலை அத்தாணி-பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் நீண்ட மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் அத்தாணி-பவானி பகுதியில் தேடிச்சென்று பார்த்தனர். அப்போது கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.

    ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்க சென்ற கங்காதேவி தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப் பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆப்பக்கூடல் போலீசார் கங்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகுமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதாக கூறப்படுகிறது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை மீண்டும் சசிக்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் ஊசிமலையை சேர்ந்தவர் சசிகுமார் (23). இவர் தற்போது முனியப்பன் பாளையத்தில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தங்கி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை ஊசிமலை பகுதியை சேர்ந்த கவின்குமார் (17) என்ற தனது நண்பருடன் பவானி ஆற்றில் அத்தாணி-சவுண்டபூர் பாலம் அடியில் இறங்கி குளிக்க சென்றனர்.

    அப்போது சசிகுமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கவின்குமார் சசிகுமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆப்பக்கூடல் போலீசாரு க்கும் தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் 3 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சசிகுமாரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை மீண்டும் சசிக்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×