குளிக்க சென்ற மூதாட்டி பிணமாக மீட்பு

கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்க சென்ற மூதாட்டி பிணமாக மீட்பு
Published on

ஆப்பக்கூடல்:

அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கங்காதேவி சம்பவத்தன்று காலை அத்தாணி-பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் நீண்ட மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் அத்தாணி-பவானி பகுதியில் தேடிச்சென்று பார்த்தனர். அப்போது கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.

ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்க சென்ற கங்காதேவி தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப் பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆப்பக்கூடல் போலீசார் கங்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com