search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடோன்கள்"

    • ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது.
    • குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு வேளாண் ஒழுங்குமுறை கமிட்டி வளாகம் கடந்த சில வருடமாக பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்கிய நிலையிலும், முட் புதர்கள் மண்டிய நிலையிலும் காணப்படுகிறது. ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது. பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், சாலியமங்களம், அம்மாபேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாரந்தோறும் பருத்தி கொள்முதலுக்காக பாபநாசம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இரவு, பகல் என ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

    பருத்தி தாட்டுகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது அதனால் பருத்தி கொள்முதலுக்கு வரும் விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

    எனவே அரசு பாபநாசம் ஒழங்குமுறை கமிட்டி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • உலர் களமும், இருப்பு வைக்க குடோன்களும், பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.
    • வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்களையும், இருப்பு வைக்க குடோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் உலர்களங்கள் சிதிலடைந்தும், குடோன் பராமரிப்பு இல்லாமலும் உள்ளன.இது குறித்து ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் நாகூர் திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிமங்கலம் ஒன்றியத்தில், பி.ஏ.பி., பாசனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அறுவடைக்கு பிறகு, விளைபொருட்களை காய வைக்க, உலர் களமும், இருப்பு வைக்க குடோன்களும், பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. தொடர் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான உலர்களங்கள் சிதிலமடைந்துள்ளன.

    புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி கிராமத்திலுள்ள, இரண்டு உலர்களங்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகின்றன. மக்காச்சோளம், கொண்டைக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் இருப்பு வைக்கும் குடோனும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.எனவே, கிராமங்களிலுள்ள, உலர்களம், குடோனை புதுப்பிக்கவும், கூடுதல் களங்கள் கட்டவும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×