search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நதிநீர் பிரச்சனை"

    • கர்நாடகா வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது
    • 10 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது

    தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.

    கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

    இக்கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

    • 3000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது
    • கன்னட அமைப்பினரும் கர்நாடக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

    தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து கர்நாடகாவில் பல பகுதிகளில் அம்மாநில விவசாய அமைப்பினரும் கன்னட அமைப்பினரும் போராட்டங்களை நடத்தினர்.

    இந்நிலையில், காவிரி பிரச்சனைக்காக தமிழக டெல்டா மாவட்டங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடைபெற்றது.


    இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது:

    "காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து கட்சி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். நேற்று, தஞ்சையில் விவசாயிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் இருந்து அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×