search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் விளையாட்டு போட்டி"

    • 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

    புதுடெல்லி:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

    இந்தநிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இந்திய அணியின் கொடியை ஏந்திச்செல்வார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பி.வி.சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
    • ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா காயத்தால் கடைசி நேரத்தில் விலகி உள்ளார்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடக்கிறது.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.

    தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்கு வாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

    கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் , 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கம் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த முறை அதைவிட கூடுதலாக பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா , மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என்று கருதப்படுகிறது. ஆக்கியிலும், மகளிர் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு உள்ளது.

    ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா காயத்தால் கடைசி நேரத்தில் விலகி உள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டி இல்லாதது இந்தியாவுக்கு பாதிப்பே.

    நாளை தொடக்க விழா நிகழ்ச்சி மட்டுமே நடக்கிறது. 29-ந்தேதியில் இருந்து போட்டிகள் ஆரம்பமாகிறது.

    • காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்திய அணியில் இருந்து தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ×