search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திபுரம்"

    • பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
    • ஒரு நாளைக்கு 100 இளைஞர்கள் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    குனியமுத்தூர்,

    கோவை காந்திபுரத்தில் நகர பஸ் நிலையம் ெசயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இது எப்போதுமே பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.

    இப்படி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இளைஞர்களை குறித்து வைத்து பெண் புரோக்கர்கள் சிலர் பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இந்த செயல்களில் ஈடுபடும், பெண் புரோக்கர்கள் தோளில் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு சுற்றி திரிகின்றனர்.

    இவர்கள் அந்த வழியாக வரும் 20 முதல் 25 வயதுடைய இளைஞர்களை பார்த்து வழிமறிக்கின்றனர்.

    அவர்களிடம் அழகான பெண்கள் உள்ளனர் என்று ஆசை வார்த்தையை உதிர்க்கின்றனர். அழகான பெண் என்றவுடன் இளசுகளுக்கு சபலம் ஏற்பட்டு மூதாட்டி கூறுவதை மேலும் ேகட்க தொடங்கி விடுகின்றனர்.

    உடனே பெண் புரோக்கரும், இளை–ஞர்களை உசுப்பேற்றும் வகையில் மூதாட்டியின் செல்போனில் போன் செய்து, இளைஞர்களிடம் கொடுக்கிறார்.

    அப்போது மறுமுனையில் பெண் ஒருவர் பேசுகிறார். இதனால் உண்மை தான் என நம்பி இளைஞர்களும் அவர்களுடன் பேசி கொண்டே இருக்கின்றனர்.

    அப்போது எதிர் முனையில் ேபசும் பெண், நீங்கள் எந்த கலர் சட்டை அணிந்து இருக்கிறீர்கள். எங்கு நிற்கிறீர்கள் என விசாரிக்கின்றனர். நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள் நான் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என கூறுகிறார்.

    இளம்பெண் கூறியதை கேட்டதும் வாலிபரும் தன்னை மறந்து அப்படியே இளம்பெண்ணை பார்ப்பதற்காக அவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

    அப்போது அந்த பெண் புரோக்கர் இளைஞரிடம் எனக்கு உண்டானபணத்தை கொடுத்து விடு. நான் புறப்படுகிறேன். அந்த பெண் வந்ததும் நீ சந்தித்து கொள் என கூறி நச்சரிக்கிறார். இளைஞர்களும், அதனை நம்பி ரூ.200 முதல் ரூ.500 வரை பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

    ஆனால் இளைஞர் பல மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. பெண் வருவாள். அவளை சந்திக்கலாம் என ஆசையோடு காத்து நின்ற இளைஞர்கள் தாங்கள் ஏமாந்ததை யாரிடமும் சொல்லாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர்.

    இதுபோன்ற சம்பவத்தால் ஒரு நாளைக்கு சராசரியாக 100 இளைஞர்கள் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது:-

    இளைஞர்கள் இது போன்ற பெண் புரோக்கர்களை உடனே காவல்துறையில் பிடித்து ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் சபலம் அதை தடுத்து விடுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தும் பெண் புரோக்கர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதித்து விடுகின்றனர்.

    ஒவ்வொரு பெண் புரோக்கருக்கும் 2, 3 பேர் செல்போனில் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஒரு பெண் புரோக்கர் அழைத்தால், மற்ற புரோக்கர்கள் தயார் நிலையில் இருந்து போனில் பேசுகின்றனர். இது அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ஆனால் இது தெரியாத வாலிபர்கள் பணத்தை இழந்து ஏமாறுகிறார்கள்.

    இத்தகைய பெண் புரோக்கர்களை போலீசார் அடையாளம் கண்டும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே இளைஞர்களின் நலன் பாதுகாக்கப்படும். அவர்கள் ஏமாறும் நிலை தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சாலைகளில் மிதிவண்டியில் செல்பவா்களுக்கு பிரத்யேக பாதை, நடந்து செல்பவா்களுக்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
    • மாநகரில் கிராஸ்கட் சாலையில் வண்ணம் பூசப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல பிரத்யேக சாலை அமைக்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு, மிதிவண்டிப் பாதை, நடைப்பாதை, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சாலைகளில் மிதிவண்டியில் செல்பவா்களுக்கு பிரத்யேக பாதை, நடந்து செல்பவா்களுக்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி சோதனை அடிப்படையில் கோவை மாநகராட்சி எதிரே டவுன்ஹாலில் நடந்து செல்பவா்களுக்கு ஒரு பாதை, மிதிவண்டியில் செல்பவா்களுக்கு ஒரு பாதை என தனியாக அமைக்கப்பட்டன. இதேபோல, காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, தற்போது கிராஸ்கட் சாலையில் நடந்து செல்பவா்களுக்கு பிரத்யேக சாலைகள் நிரந்தரமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

    கோவை கிராஸ்கட் சாலை, டவுன்ஹால் சாலையில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட வண்ணமயமான பிரத்யேக மிதிவண்டிப் பாதை, நடைப்பாதை திட்டங்களை ெகாரோனா பாதிப்பு காரணமாக கடந்த காலங்களில் நிரந்தரமாக செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது, முதல்கட்டமாக மாநகரில் கிராஸ்கட் சாலையில் வண்ணம் பூசப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல பிரத்யேக சாலை அமைக்கப்பட உள்ளது. வெயில், மழை போன்றவற்றில் இருந்து மக்களை காக்கும் விதமாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேற்கூரையும் அமைக்கப்பட உள்ளது என்றாா்.

    • கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
    • 2 வாலிபர்கள் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    கோவை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேர் விஜயகுமாைர அசைய முடியாதபடி மடக்கி பிடித்தனர். பின்னர் மற்றொரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.980 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஜயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் சென்ற காந்திபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அஜித், பாலாஜி ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    ×