search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி வளர்ச்சி நாள் விழா"

    • நிகழ்ச்சிகளை பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பாலசந்தர் தொகுத்து வழங்கினார்.
    • பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆர்.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரணர் மாணவர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    உடுமலை:

    உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் செயலாளர் கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியை டி.கலைவாணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை கே.டி.பூரணி முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆர்.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரணர் மாணவர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    உடற்கல்வி இயக்குனர் கே.அன்பரசு ராஜமன்னார் அறக்கட்டளை பற்றியும், அதன் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். முதுகலை வேதியியல் ஆசிரியர் சி.சுப்பிரமணியம் காமராஜர் பற்றி கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் காமராஜர் பற்றி சொற்பொழிவு ஆற்றினர். கவிதைகள், பாடல்கள், நடனம் மூலம் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்துக் கூறினர். காணொளி காட்சியின் வாயிலாக காமராஜர் வரலாறு மாணவர்களுக்கு காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு விருந்தினர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் .விழா முடிவில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை பி.பவானி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பாலசந்தர் தொகுத்து வழங்கினார்.

    • இடையகோட்டையில் இல்லம் தேடி கல்வி சார்பாக கல்வி வளர்ச்சி நாள்விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • தன்னார்வலர்கள், பெற்றோர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டையில் இல்லம் தேடி கல்வி சார்பாக கல்வி வளர்ச்சி நாள்விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட திட்ட அலுவலர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது.

    இவ் விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி செல்லமுத்து ,ஜென்சி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத் தலைவர், இல்லம் தேடி கல்வி பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்கரீம், ஒட்டன்சத்திரம் வட்ட பொறுப்பாளர்கள்கீதா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×