என் மலர்
நீங்கள் தேடியது "Education Development Day Celebration"
- நிகழ்ச்சிகளை பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பாலசந்தர் தொகுத்து வழங்கினார்.
- பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆர்.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரணர் மாணவர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரையாற்றினார்.
உடுமலை:
உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் செயலாளர் கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியை டி.கலைவாணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை கே.டி.பூரணி முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆர்.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரணர் மாணவர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரையாற்றினார்.
உடற்கல்வி இயக்குனர் கே.அன்பரசு ராஜமன்னார் அறக்கட்டளை பற்றியும், அதன் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். முதுகலை வேதியியல் ஆசிரியர் சி.சுப்பிரமணியம் காமராஜர் பற்றி கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் காமராஜர் பற்றி சொற்பொழிவு ஆற்றினர். கவிதைகள், பாடல்கள், நடனம் மூலம் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்துக் கூறினர். காணொளி காட்சியின் வாயிலாக காமராஜர் வரலாறு மாணவர்களுக்கு காட்டப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு விருந்தினர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் .விழா முடிவில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை பி.பவானி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பாலசந்தர் தொகுத்து வழங்கினார்.






