search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைராஜன்"

    • சுமார் 2 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் கலைராஜனுக்கு தி.மு.க.வில் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
    • அ.தி.மு.க.வில் கலைராஜன் மாணவரணி செயலாளராக இருந்த போது அவருக்கு கீழே மாணவரணியில் இருந்தவர்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி.

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வி.பி.கலைராஜன்.

    2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் தி.நகர் தொகுதியில் தொடர்ந்து ஜெயித்து வந்த அவர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

    அந்த கட்சியில் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சென்றார். அதன் பிறகு தி.மு.க.வுக்கு வந்தவர் வி.பி.கலைராஜன். தி.மு.க.வில் அவர் இப்போது இலக்கிய அணி செயலாளராக உள்ளார்.

    கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தனக்கு தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இருந்தார். ஆனால் மாவட்டச் செயலாளரான ஜெ.அன்பழகன் மறைவு காரணமாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு எம்.எல்.ஏ. 'சீட்' கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரது சகோதரரான பகுதிச் செயலாளர் ஜெ.கருணாநிதிக்கு தியாகராய நகரில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெ.கருணாநிதி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி விட்டார். ஆனாலும் வி.பி.கலைராஜன் வேறு ஏதாவது ஒரு பதவி தி.மு.க.வில் கிடைக்கும்? என்ற எதிர்பாார்ப்பில் இருந்து வருகிறார்.

    சுமார் 2 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் கலைராஜனுக்கு தி.மு.க.வில் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அவருடைய ஆதரவாளர்கள் நிறையபேர் இல்லை என்பதே உண்மையாகும்.

    அ.தி.மு.க.வில் கலைராஜன் மாணவரணி செயலாளராக இருந்த போது அவருக்கு கீழே மாணவரணியில் இருந்தவர்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி. இப்போது தி.மு.க.வில் செந்தில் பாலாஜி யாரும் எதிர்பாராத அளவுக்கு அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியராக திகழ்ந்து வருகிறார்.

    அது போன்று எந்த வளர்ச்சியும் இல்லாமல் சோர்ந்து போய் உள்ள வி.பி.கலைராஜனை தாய் கழகமான அ.தி.மு.க. பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. இந்த வலையில் வி.பி.கலைராஜன் சிக்குவாரா? அல்லது தி.மு.க.வில் தொடர்ந்து பயணிப்பாரா? என்பது போக போகத்தான் தெரிய வரும்.

    ×