search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் மகளிர் உரிமை தொகை"

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக குவிந்த பொதுமக்கள்
    • 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், செப்.20-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 75 சதவீதம் பேருக்கு உரிமை தொகை கிடைத்துள்ளது. பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. நிராகரிப்பு குறித்து இதுவரை செல்போனில் எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. எனவே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தை பொருத்த வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் திருவட்டார் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்களில் 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பலரும் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஏராளமான பொதுமக்கள் உதவி மையங்களுக்கு வந்திருந்தனர். ஆனால் சர்வர் செயல்படாதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்திற்கு இன்று 2-வது நாளாக காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் உதவி மையங்களில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டு காத்திருந்தனர். காலை 10.15 மணிக்கு உதவி மைய ஊழியர்கள் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை சரி பார்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தனர்.

    சிலருக்கு வங்கி கணக்கு குளறுபடி, வருமான வரி பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உதவி மையங்களுக்கு வந்த பொதுமக்களின் முகவரிகள் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்துவிட்டு ஆன்லைன் மூலமாக குறைபாடுகளை பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதே போல் தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இம்முகாம்களில் ஏ, பி, சி. என மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், ஒய்.எம்.சி.ஏ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாமினை, கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாம் 204 இடங்களில் இன்று முதல் தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி வந்து விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில், காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க முகாம் பொறுப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட நிலையான அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்முகாம்களில் ஏ, பி, சி. என மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட இடம், நாள் மற்றும் நேரத்தில் முகாம்களுக்கு வருகை தந்து விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரின் விண்ணப்பங்களும் பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி வட்டாட்சியர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கினர்
    • முதல் நாளான நேற்று மாவட்ட முழுவதும் 42 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

    அதன்படி மாவட்டத்தில் முழு நேரம், பகுதி நேரமாக இயங்கி வரும் மொத்தம் 614 ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த கடைகளின் மூலம் 2லட்சத்து 59 ஆயிரத்து 344 குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல் நாளான நேற்று மாவட்ட முழுவதும் 42 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 உரிமை தொகை பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கினர்.

    ×