search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artist Women Entitlement Scheme"

    • காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இம்முகாம்களில் ஏ, பி, சி. என மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், ஒய்.எம்.சி.ஏ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாமினை, கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாம் 204 இடங்களில் இன்று முதல் தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி வந்து விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில், காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க முகாம் பொறுப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட நிலையான அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்முகாம்களில் ஏ, பி, சி. என மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட இடம், நாள் மற்றும் நேரத்தில் முகாம்களுக்கு வருகை தந்து விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரின் விண்ணப்பங்களும் பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி வட்டாட்சியர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×