search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சமீரன் பள்ளியில்"

    • வடசித்தூர் சமத்துவபுரம் பகுதியில் வீடுகள் பழுதுபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
    • பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு சத்துணவு பொருட்கள், முட்டைகள் இருப்பில் உள்ளனவா என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    நெகமம்:

    கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு செய்தார்.

    கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காட்டம்பட்டி, வடசித்தூர் ஆகிய பகுதிகளில் ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதின் மூலம் கிராம புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு- காட்டம்பட்டி வரை 7.78 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ.10.15 கோடி மதிப்பில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும் வடசித்தூர் சமத்துவபுரம் பகுதியில் வீடுகள் பழுதுபார்க்கும் பணியை பார்வையிட்டார். பின் வடசித்தூர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து கலெக்டர் சமீரன் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினார்.

    அப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு சத்துணவு பொருட்கள், முட்டைகள் இருப்பில் உள்ளனவா என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×