search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டரிடம் புகார்"

    • ஊராட்சி மன்ற தலைவரும், அவருடன் இரண்டு நபர்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட உங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் எதற்கு எனக் கூறி கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.
    • புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் காவல்துறை மீதும், தனிநபர் கழிப்பிடம் கட்ட விடாமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர், மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மஞ்சாரஹள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏர்கோள்பட்டி கிராமத்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் எங்கள் பட்டா நிலத்தில் தனிநபர் கழிப்பிட கழிவறை கட்ட உள்ளோம். இதனை ஊராட்சி மன்ற தலைவரும், அவருடன் இரண்டு நபர்களும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட உங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் எதற்கு எனக் கூறி கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.

    இது குறித்து பென்னாகரம் தாசில்தாரிடமும், ஏரியூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தோம். ஏரியூர் காவல் நிலைய போலீசார் நீங்கள் தனிநபர் கழிப்பிடம் கட்டினால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுகிறார்.

    புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் காவல்துறை மீதும், தனிநபர் கழிப்பிடம் கட்ட விடாமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடும் பஞ்சாயத்து தலைவர், மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பெரியோர்களின் முன்னிலையில் பேசி சமாதானம் செய்து எனது மகளை கூட்டி சென்றார்கள்.
    • கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி எனது மகள் தூக்கிட்டு இறந்ததார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சேட்டு நேற்று உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    பள்ளக்கொல்லை கிராமத்தில் வசித்து வரும் எனக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். எனது மகள் கவிதாவிற்கும் லாலாகொட்டாயை சேர்ந்த ஒரு நபருக்கும் இருவீட்டு பெரியோர்களின் சம்மதத்தின் பேரில் கடந்த 2020 ஆம் ஆண்டு செம்மனஅள்ளி அருகே உள்ள ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் ஆன சில நாட்களில் வரதட்சனை கேட்டு எனது மகளை சித்ரவதை செய்து வந்தனர். மேற்படி நபர்களின் கொடுமைகள் குறித்து எனது மகள் ஆரம்பத்திலேயே எங்களிடம் கூறினாள். நாங்களும் சமாதானப்படுத்தி வந்தோம்.

    கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மேற்படி நபர்கள் எனது மகளை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்ப டுத்தியதன் காரணமாக எனது மகள் தற்கொலை முயற்சி செய்து, அதன் காரணமாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு பெரியோர்களின் முன்னிலையில் பேசி சமாதானம் செய்து எனது மகளை கூட்டி சென்றார்கள். அதன் பிறகும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் பணமும் நகையும் கேட்டு அடித்து கொடுமைப்ப டுத்தினார்கள்.

    மீண்டும் எனது மகள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மதிக்கோண்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் நிலைய அதிகாரிகள் மேற்படி நபர்களை அழைத்து விசாரித்து இனி இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது, வந்தால் வழக்கு போடுவோம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி எனது மகள் தூக்கிட்டு இறந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது.

    காவல் நிலைய அதிகாரிகள் சந்தேக மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆனால் எனது மகளின் இறப்பிற்கு முழு முதற் காரணமே எனது மகளின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தான்.

    மேற்படி நபர்கள் திட்டமிட்டு எனது மகளை கொலை செய்துள்ளார்கள். எனவே உரிய விசாரணை செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்த குற்றத்திற்கு முறையாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யும்படி காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு
    • வீட்டுமனை பத்திரத்தை மீட்டு தர வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம், அருகந்தம் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று மக்கள் குறை தேர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மகளும் மருமகளும் சேர்ந்து வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். மேலும் அசல் வீட்டு மனை பத்திரத்தை எடுத்துக்கொண்டு ஜெராக்ஸ் காப்பியை எங்களிடம் கொடுத்தனர்.

    இதனால் நாங்கள் இருவரும் வாடகை வீட்டில் கூட வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனவே எங்களது வீட்டுமனை அசல் பத்திரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தாயையும், தந்தையையும் அடித்து துன்புறுத்திய மகன் மற்றும் மருமகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    • கந்து வட்டி கும்பல் என் கணவரிடம் பணம் கேட்டு அவர்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்று கை, கால்களை கயிற்றால் கட்டி அடித்துள்ளனர்.
    • இடது கையை அடித்து உடைத்து விட்டார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் வேடி. இவரது மனைவி மல்லிகா. இவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள கந்துவட்டிக்காரரிடம் கடந்த 2011-ல் கவுன்சிலர் தேர்தலுக்காக ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினேன். 10 ஆயிரம் உடனே திருப்பி கொடுத்து விட்டேன். மீதி பணத்தை 1 லட்சம் ரூபாய் சீட்டு போட்டு முப்பது ஆயிரத்தை கொடுத்து விட்டேன். பிறகு கடந்த 4-ம் தேதி கந்து வட்டி கும்பல் என் கணவரிடம் பணம் கேட்டு அவர்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்று என் கை, கால்களை கயிற்றால் கட்டி அடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தினர்.

    இடது கையை அடித்து உடைத்து விட்டார்கள். அப்போது நான் அலறிய சத்தத்தால் விட்டு விட்டனர். நான் எங்கள் உறவினர்களிடம் சென்று சொல்லியபோது சிகிச்சைக்காக என் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் கூறும்போது கை உடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து கோட்டப்பட்டி போலீசில் ஊர் மக்கள் சாட்சியோடு மனு கொடுத்தோம். மேலும் இந்த கந்து வட்டி கும்பலால் எங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பழனியை சேர்நத விவசாயிகள் காய்ந்த சூரியகாந்தி பூக்களுடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எண்ணைய்வித்து பயிராக சூரியகாந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தரமற்ற விதைகளால் பெரும்பாலான தோட்டங்களில் பூக்கள் காய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளில் சென்று கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. எனவே இப்பகுதியில் உள்ள விதை மற்றும் உரக்கடைகளில் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×