search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers complain"

    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
    • அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    திருச்சுழி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகள், கண் மாய்கள், குளம், குட்டை களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது சுமார் 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசா யிகள் உரமிடுவது, களை எடுப்பது போன்ற பணி களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் நாற்று நடும் பணிகளையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலமாக உரங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் கொடுத்து உரங்களை வாங்க உள்ளதாகவும், அப்படி கொடுத்தும் உரங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் இதனால் உரம் வாங்க தனியார்கடைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் கூறுகின்றனர்.

    தனியார் உரக்கடைகள் யூரியா உரங்களை அதிக ளவில் இருப்பு வைத்துக் கொண்டு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது போன்ற ேதாற்றத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனர். 45 கிலோ எடை கொண்ட யூரியா உர மூடைகள் ரூ.330 முதல் ரூ.350 வரை யிலும் சுமார் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங் கள் ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1600 வரை யிலும் விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இணை உரங்க ளையும் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், இதனால் யூரியா உரம் வாங்கும் போது 5 மடங்கு அதிக விலை கொண்ட டி.ஏ.பி போன்ற இணை உரங்களையும் வாங்க வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தனியார் உரக்கடைகளில் வாங்கும் உரங்களுக்கு ரசீதுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என வும், கைரேகை மற்றும் ஆதார் பதிவுகளை அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படு வதாகவும் சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

    அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் ஆய்வு பெயரளவிலேயே உள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த நிலையில் தீவிர மாக ஆய்வுகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து விவசாயி களுக்கு தடையின்றியும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆதார பூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர்.
    • நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    பி.ஏ.பி., விவசாயிகள் நலச்சங்கம், உப்பாறு அணை விவசாயிகள் சங்கம் மற்றும் பூசரநாயக்கன்பாளையம் ஏரி விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., தண்ணீரை ஒரு குறிப்பிட்ட கிணறு வாயிலாக, 35 நாட்களாக தினமும் 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் திருடப்பட்டு 100 டேங்கர் லாரி அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதார பூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நீர் திருட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது.குறிப்பிட்ட நீர் திருட்டு வாயிலாக மட்டும், பி.ஏ.பி., தண்ணீர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

    இதுபோன்று பல்வேறு இடங்களில் நீர் திருட்டு நடந்து வருவதால் 2 சுற்றுகள் வினியோகம் செய்யப்பட வேண்டிய தண்ணீர் ஒரே சுற்று அளவுக்கு நான்காம் மண்டல ஆயக்கட்டுதாரர்களுக்கு அரை, குறையாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் வேலுசாமி கூறுகையில், பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் பல இடங்களில் திருடப்படுகிறது என தொடர்ந்து கூறி வருகிறோம்.இதனால் 2 சுற்றுகளுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டிய, 2,500 மில்லியன் கன அடி தண்ணீரை ஒரே சுற்றில் முடித்து விட்டனர். நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பழனியை சேர்நத விவசாயிகள் காய்ந்த சூரியகாந்தி பூக்களுடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எண்ணைய்வித்து பயிராக சூரியகாந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தரமற்ற விதைகளால் பெரும்பாலான தோட்டங்களில் பூக்கள் காய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளில் சென்று கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. எனவே இப்பகுதியில் உள்ள விதை மற்றும் உரக்கடைகளில் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பருவமழை துவங்கி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    • பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலையில் நடந்த தென்னை விவசாயிகள் மாநில மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழை துவங்கி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் பயிருக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், தனியார் நிறுவனங்கள் அவற்றை பதுக்கி வருவதோடு இணை பொருட்கள் வாங்க வேண்டும்என வலியுறுத்துகின்றனர். எனவே கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வினியோகம் செய்ய வேண்டும்.தமிழக பயிர் சாகுபடிக்கு ஏற்ப, உர வகைகள் இறக்குமதி செய்யப்படாததால் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் உரங்கள் கிடைக்காத சூழல் உள்ளது. இப்பிரச்னைக்கு, அரசு முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சிமலையில், ஒரு கி.மீ., தூரத்திற்கு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள், விவசாயிகள் மட்டுமன்றி மலைமேலுள்ள நகரங்களும் பாதிக்கும் சூழல் உள்ளது.இத்தீர்ப்பு குறித்து கேரள அரசு ஏற்கனவே மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து, முன்னதாகவே நீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடியை அதிகரிக்கும் வகையிலும்விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    இத்திட்டத்தில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். குறைந்தபட்சம்ஒரு ஹெக்டர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி தொகுப்பு மாற்ற வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

    ×