search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலவரம்"

    • கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு போரட்டம் நடைபெற்றது.
    • காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு கடந்த 17 -ந் தேதியன்று போரட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பள்ளி சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களான காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.

    தீயில் கருகி சேதமடைந்த இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், காவல் துறை வாகனங்கள் ஆகியவையின் பதிவு எண்களை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் எந்தெந்த வாகனங்கள் உள்ளது என்பதை கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிபதி முகமது அலி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் வாகன பதிவு எண்கள், வாகனத்தின் காப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூர்சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி யில் நடந்த கலவரம் தொட ர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் தொடர்புடைய குற்றவா ளிகளை தேடி வருகிறார்கள்.

    அந்த வகையில் காவல்துறை வாகனத்தின் மீது கல் எறிந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் கிராமம் இந்திரா நகர் ராம்குமார் என்கின்ற ராம்கி என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் இடம்பெற்று வன்மத்தை தூண்டும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

    கலவரத்திலும் பங்கு பெற்று பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.

    இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறித்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு, கைது செய்து இவர்களை கள்ள க்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கை தொட ரும் எனவும் அறிவித்து ள்ளனர்.

    இதனால் கைது எண்ணி க்கை 357 ஆக அதிகரித்து உள்ளது.

    • முல்லைப்பெரியார் அணையை திறந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது,

    தமிழக அரசு முல்லைப் பெரியார் அணையை திறந்ததால் இங்குள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை கண்டிக்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமனாலும் பேசிவருகின்றனர். இதை மையப்படுத்தி அ.தி.மு.க போராட்டம் நடத்தினால், அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்மாவட்டங்களில் போட்டி போராட்டாம் நடத்தும். தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநில மக்களையும் தூண்டிவிட்டு கலவர சூழ்நிலையை உருவாக்குவது அரசியல் பிழைப்பு. மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதுடன், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • கனியாமூர் கலவரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி அன்று பிளஸ் -2 மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். பிறகு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி அன்று இந்த அமைதியான போராட்டம் மிகப்பெரிய ஒரு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளியில் உள்ள பல்வேறு பொருட்கள் தீ வைத்து எரித்து நாசமாயின. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் 306 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் கைது எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. இந்த கைது நடவடிக்கை மேலும் தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • குமரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • வெளியூருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்

    நாகர்கோவில்:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் கணியாமூரில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையடுத்து அங்கு கலவரம் வெடி த்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட தலைநகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்ரண்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று இரவு ஸ்டே பஸ்கள் அனைத்தும் டெப்போக்களுக்கு கொண்டுவர டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டது. இதையடுத்து அனைத்து ஸ்டே பஸ்களும் டொப்போகளுக்கு கொண்டுவரப்பட்டது.

    பஸ் போக்குவரத்து இன்று காலையில் தாமதமாக தொடங்கியது.குமரி மாவட்டத்தில் உள்ள 11 டெப்போக்களில் இருந்தும் தினமும் அதிகாலை 4 மணிக்கு பஸ்கள் பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கிராமப்புறங்களுக்கும் வெளியூர்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இன்று இரண்டு மணி நேரம் தாமதமாக 6 மணிக்கு பிறகு பஸ்கள் டெப்போக்களிலிருந்து பஸ் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டது.

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணி முதலே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இன்று தாமதமாகவே பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனால் அதிகாலையிலேயே வெளியூருக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்.மேலும் நெல்லை, மதுரைபோன்ற நகரங்களுக்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பஸ்கள் புறப்பட்டு சென்றது. தஞ்சாவூர், கோவை, குமிழி போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தி லிருந்து கன்னியாகுமரி களியக்காவிளை தக்கலை குளச்சல் போன்ற ஊர்க ளுக்கு செல்லும் பஸ்களும் இன்று தாமதமாகவே இயக்கப்பட்டது.

    பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்களும் சற்று பாதிப்புக்கு ஆளானார்கள்.

    காலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் ெரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை, நாங்குநேரி ெரயில் நிலையங்களிலும் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் மக்கள் நல அமைப்பு செயலாளர் திடீர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்ட காரர்கள் கற்களை வீசினார்கள். இந்த கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர். என்றாலும் போராட்டம் ஓயவில்லை. நேரம் செல்ல செல்ல வன்முறை அதிகரித்தது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது. இதில் பள்ளி பஸ்கள், டிராக்டர்கள் எரிந்து நாசமானது.

    இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×