search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்துக் கேட்பு கூட்டம்"

    • காருடையாம்பாளையம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பவித்திரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
    • கல்குவாரி அமைந்தால் சுற்று புற பகுதிகளில் பலருக்கு பணிகள் கிடைக்கும்


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள காருடையாம்பாளையம் கிராம பகுதியில் கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் க.பரமத்தி அடுத்த பவித்திரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் புதுக்கநல்லி, மாலப்பாளையம்புதூர் ஆகிய சமூக ஆர்வலர்கள் ஒரு சிலர் கல்குவாரி அமைக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து பேசினர். அதில் ஒரு சிலர் கல்குவாரி அமைந்தால் அதன் சுற்று புற பகுதிகளில் வசிக்கும் பலருக்கு பணிகள் கிடைக்கும் என ஆதரவாக பேசினர். பிறகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு சில குவாரிகளுக்கு போதிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக ஆழமாக கல்வெட்டி எடுக்கப்பட்டு வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடையாது. மேலும் கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை. ஒன்றியம் முழுவதும் சட்ட விரோதமான இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை முதலில் அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சா லைகளில் களப்பணியும் நடைபெறவுள்ளது.
    • தொழிலாளர்களும் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரியில் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1948ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் பிரிவு 5ன் படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகி தங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவினை அமைத்து ஆணை பிறப்பித்தது.

    அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப்-ஐ சார்ந்த மாடசாமி, சி.ஐ.டி.யூவை சேர்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி-ஐ சேர்ந்த ஜீவானந்தம், கோவில்பட்டி தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவைர் விஜய்ஆனந்த், ஆல் இந்தியா சேம்பர் ஆப் மேட்ச் இண்டஸ்ரீஸ் செயலாளர் நூர்முகமது மற்றும் சாத்தூர் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்படி குழுவின் கூட்டம் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சா லைகளில் களப்பணியும் நடைபெறவுள்ளது.

    எனவே, தீப்பெட்டி தயாரி க்கும் தொழில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்களும் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆலோசனை
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு காரணி கள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள் ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோச னைகளை வழங்கலாம்.

    மேலும் மாநிலக் கல்வி கொள்ளை தொடர்பான தங்களின் கருத்துகளை எழுத்து பூர்வமாகமுழுமையான முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×