search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம்"

    • விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள் செய்து வருகிறார்கள்
    • இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பங்கு தந்தை அருட்பபணியாளர் ஆன்றனி அல்கார்ந்தர் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.

    திருவிழா நாட்களில் தினமும் பழையகோவிலில் திருப்பலி, புனிதசூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது. 7-ந் திருவிழாவான நேற்று இரவு திருச்சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். 8-ந் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30மணிக்கு ஜெபமாலையும் அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்ப பணியாளர் தேவதாஸ் தலைமையில் திட்டுவிளை பங்கு தந்தை அருட்ப பணியாளர் சஜுமறையுரை ஆற்றுகிறார்.இரவு 9மணிக்கு திருச்சப் பரபவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் திருவிழாவை சிறப்பிக்கின்றனா்.காலை 10-30 மணிக்கு நடைபெறும் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆன்றனி பிரபு தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை வகிக்கிறாா். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.

    இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனிநடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில்உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத் தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி தினமும் திருப்பலி மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும் அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடந்தது.

    குளச்சல் வட்டார முதல்வர் அருட் பணி யாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமையில் அன்னை நகர் பங்கு தந்தை அருட்பணியாளர் ரைமண்ட் மறையுரை ஆற்றினார். இதனை மறைக்கல்வி மன்றம் சிறார் இயக்கம் மற்றும் பள்ளிகளின் ஆசிரி யர்கள் சிறப்பித்தனர். இரவு 9 மணிக்கு பல் சுவைகலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச் சியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர்ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்கினார். பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொரு ளாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் திரளான பங்குமக்கள் மற்றும் பங்கு பேரவையின் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • திருவிழா நாட்களில் பழைய கோவிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்த லங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் 8 மணி முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சை கொடிகள் ஊா்வலமும் மாலை 6-30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. பங்கு தந்தை ஆன்றனி அல்கார்ந்தர் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.

    திருவிழா நாட்களில் பழைய கோவிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4-30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா்.

    காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடி யிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது..

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×