search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனகமூலம் சந்தை"

    • கனகமூலம் சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
    • ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் முடிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அந்த சந்தையை தற்காலிகமாக அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதையையொட்டிய பகுதியில் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ்,மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் கனகமூலம் சந்தையை இடம் மாற்றுவது குறித்து வடசேரி கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

    வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கனகமூலம் சந்தையை வேறுஇடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தற்போது கனகமூலம் சந்தையில் 122 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே கனகமூலம் சந்தையின் ஒரு புறத்தில், தற்காலிகமாக கொட்டகை அமைத்து காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வடசேரி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தங்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடசேரியில் வருகிற 28-ந்தேதி வியாபாரிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வடசேரி எம்எஸ் ரோடு பகுதியை பார்வையிட்ட போது ஒரு வங்கி முன்பு கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது. ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ஆம்னிபஸ்களை எங்கிருந்து இயக்குவது என்பது குறித்து மேயர் மகேஷ் இன்று வடசேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனகமூலம் சந்தையில் நுண்ணுரம் தயாரிக்கும் இடத்தில் காலியிடம் இருப்பது தெரியவந்தது.

    இந்த இடத்தில் இருந்து ஆம்னிபஸ்களை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள் கனகமூலம் சந்தையில் இருந்து இயக்கப்படுவதால், அந்த பகுதியை சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் கனகமூலம் சந்தை யில் செயல்படும் நுண்ணுரம் தயாரிக்கும் இடத்தை மேயர் மகேஷ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையுறை அணிந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினார். வடசேரி எம்எஸ் ரோடு பகுதியை பார்வையிட்ட போது ஒரு வங்கி முன்பு கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது. இதனை பார்த்த மேயர், அதிகாரிகளிடம் கழிவுநீர் ஓடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கழிவுநீர் ஓடை உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆய்வின் போது சுகாதாரஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×