search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்: - ஆம்னி பஸ்களை கனகமூலம் சந்தையில் இருந்து இயக்க நடவடிக்கை - மேயர் மகேஷ் நேரில் ஆய்வு
    X

    ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்: - ஆம்னி பஸ்களை கனகமூலம் சந்தையில் இருந்து இயக்க நடவடிக்கை - மேயர் மகேஷ் நேரில் ஆய்வு

    • ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வடசேரி எம்எஸ் ரோடு பகுதியை பார்வையிட்ட போது ஒரு வங்கி முன்பு கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது. ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ஆம்னிபஸ்களை எங்கிருந்து இயக்குவது என்பது குறித்து மேயர் மகேஷ் இன்று வடசேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனகமூலம் சந்தையில் நுண்ணுரம் தயாரிக்கும் இடத்தில் காலியிடம் இருப்பது தெரியவந்தது.

    இந்த இடத்தில் இருந்து ஆம்னிபஸ்களை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள் கனகமூலம் சந்தையில் இருந்து இயக்கப்படுவதால், அந்த பகுதியை சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் கனகமூலம் சந்தை யில் செயல்படும் நுண்ணுரம் தயாரிக்கும் இடத்தை மேயர் மகேஷ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையுறை அணிந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினார். வடசேரி எம்எஸ் ரோடு பகுதியை பார்வையிட்ட போது ஒரு வங்கி முன்பு கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்றது. இதனை பார்த்த மேயர், அதிகாரிகளிடம் கழிவுநீர் ஓடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கழிவுநீர் ஓடை உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆய்வின் போது சுகாதாரஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×