search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் கொலை"

    • கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

    இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார்.
    • இமாம் பீ கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கம்பம் மாவட்டம், சித்தகானி பகுதியை சேர்ந்த ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (வயது 46). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார். இதையடுத்து இமாம் பீ கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

    இமாம் பீயிடம் ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டனர். இமாம் பீயால் கணவருக்கு விஷ ஊசி போட முடியாத சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இமாம் பீ தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து கணவருக்கு போன் செய்து நாளை மகள் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

    இதுகுறித்து மோகன்ராவிடம் தெரிவித்த இமாம் பீ அவர் வரும் வழியில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டு விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என திட்டம் போட்டு கூறினார்.

    மோகன்ராவ் தனது நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து மதிகொண்ட மண்டலம் அருகே பைக்கில் காத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஷேக் ஜமால் சாயபு பைக்கை நிறுத்தி லிப்டு கேட்டு வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டார். செல்லும் வழியில் ஷேக் ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை செலுத்திவிட்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றார்.

    இதில் மயங்கி சரிந்த ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து ஷேக் இமாம் பீ, அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ், அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • குமாரின் தொண்டை பகுதியில் சிறிய காயம் இருப்பதை கண்டு போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
    • மேலும் டாக்டர்கள் கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குமாரின் கழுத்தில் சிராய்ப்பு காயம் மற்றும் ரத்த கட்டு இருப்பதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    போரூர்:

    வளசரவாக்கம் அடுத்த கைகாங்குப்பம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் குமார்(வயது48). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயா. வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    குமாருக்கு குடிபழக்கம் உண்டு. தினசரி மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாலை வீட்டில் மர்மமான முறையில் குமார் இறந்து கிடந்தார். வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது குமாரின் தொண்டை பகுதியில் சிறிய காயம் இருப்பதை கண்டு போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் டாக்டர்கள் கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குமாரின் கழுத்தில் சிராய்ப்பு காயம் மற்றும் ரத்த கட்டு இருப்பதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து குமாரின் மனைவி விஜயாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கணவர் குமாரை கழுத்தை நெரித்து அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    விஜயா போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த குமார் தாம்பத்திய உறவுக்கு அழைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இதற்கு நான் மறுத்தும் அவரது தொல்லை எல்லை மீறியது.

    இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் கணவர் குமாரின் கழுத்தை நெரித்த போது இறந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மேலும் விஜயாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×