search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சி கீதம்"

    • தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா.
    • இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் புதிய கீதத்தில் இருந்து "ஜெய் பவானி" மற்றும் "இந்து" என்ற வார்த்தைகளை நீக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) நோட்டீஸ் வந்துள்ளதாகவும், ஆனால் அதைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "கீதத்திலிருந்து 'ஜெய் பவானி'யை நீக்கக் கோருவது மகாராஷ்டிராவை அவமதிக்கும் செயலாகும்" என்றார்.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா தேர்தல்களில் 'பஜ்ரங் பலி கி ஜெய்' எனச் சொல்லி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

    தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்வோம் என பிரசாரங்களில் அமித்ஷா பேசி வருகிறார்.

    இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எங்கள் தேர்தல் பிரசார பாடலில் இருந்து 'இந்து', 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்கச் சொல்லி எங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நான் தேர்தல் ஆணையத்திடம் கூறிக்கொள்ள விரும்புவது...

    அந்த வார்த்தைகளை நாங்கள் நீக்க மாட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×