search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைவீதிகள்"

    • தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
    • நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொது மக்கள் ஜவுளிகடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் வரும் அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது . இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.

    இதே போல கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் குவியும் பெண்கள் தங்களுக்கு பிடித்த தங்கம், வைர நகைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். பட்டாசு கடைகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் குவிந்துள்ளனர். அவர்கள் புதிதாக கு வித்து வைக்கப்பபட்டுள்ள புதிய ரக பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதே போல மளிைக கடைகளிலும் பெண்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய தேவையான எண்ணை, மாவு வகைகள் மற்றும் மளிகை பொருட்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள இனிப்பு கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.

    சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரில் தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதலே தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.

    இதே போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் விடுமுறை எடுத்து கொண்டு தீபாவளி பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சென்னை, பெங்களூரு, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை உள்பட பல ஊர்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

    இதே போல சேலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    ×