search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டு வங்கி"

    பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை ஓட்டுவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் முடக்கியதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர பிரசாத் இன்று குறிப்பிட்டுள்ளார். #TripleTalaqBill #TripleTalaq #votebankpolitics #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    முத்தலாக் முறைய தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முத்தலாக் முறையை உலகில் உள்ள 22 நாடுகள் ஒழுங்குப்படுத்தி, திருத்தியுள்ளன. ஆனால், இந்த பாலின சமத்துவத்தை இந்தியாவில் உள்ளவர்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காக கடைபிடிக்க மறுக்கின்றனர்.  காங்கிரஸ் கட்சியின் மரியாதைக்குரிய பெண் தலைவராக இருந்த சோனியா காந்தி காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற முத்தலாக் ஒழிப்புக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்.

    முத்தலாக் ஒழிப்பு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஓட்டுவங்கி அரசியலுக்காகவே  காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்து விட்டது. சோனியா காந்தி, மாயாவதி, மம்த பானர்ஜி ஆகியோர் பாலின சமூகநீதிக்காக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.
      

    முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முறை தொடர்ந்து பெருகி வருவதால் இதை தடுப்பதற்காக அவசர சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

    தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டத்தில் பாதிக்கப்பட்ட மனைவியோ, அவரது மிக நெருங்கிய உறவினர்களோ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், பாதிக்கப்பட்ட அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது குழந்தையை வளர்க்கும் உரிமையும், உள்ளூர் மாஜிஸ்திரேட்டின் உத்தரவுப்படி தனக்கும் தனது குழந்தைக்கும் ஜீவனாம்சம் பெறும் உரிமையையும் இந்த அவசர சட்டம் பெற்றுதரும். #TripleTalaqBill #TripleTalaq #votebankpolitics #RaviShankarPrasad  
    ×