search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு"

    • இன்னொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை
    • குடிபோதையால் குடும்பமே சீரழிந்த அவலம்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48) எலக்ட்ரீசியன். இவரது மனைவி அனிதா (35) இவர்களுக்கு தன்ஷிகா (11), அஸ்மிதா (9) என்ற மகள்கள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

    நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக் காததால் அனிதா அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வீட்டிலிருந்த அனிதாவை வேலைக்கு செல்ல வேண் டாம் என்று நாகராஜன் கூறினார். ஆனால் அனிதா வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் கள் தன்ஷிகா, அஸ்மிதா இருவர் மீதும் தீ வைத்தார்.அவரும் உடலில் மண்எண் ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் கருகிய 2 குழந்தைகளையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான நாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த மகள் தன்சிகா பரிதாபமாக இறந்தார்.

    அஸ்மிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இருப்பினும் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருகிறார்கள். பலியான தன்ஷிகாவின் உடல் பிரேத பரிசோ தனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்கப் படுகிறது.

    தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மகளின் உடலையும் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணை யில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்களை விற்று குடிப்பதை வாடிக்கை யாக வைத்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச் சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தான் அனிதா குடும்ப செலவு களை சமாளிக்க பக்கத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் குழந்தைகள் மீது நாகராஜன் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    குடிபோதையில் நிதானம் இழந்து நாகராஜன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கதி யாகி உள்ளது அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    • குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும். பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனைநடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    ×