search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐவூமி"

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி இந்தியாவில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #smartphone



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி இந்தியாவில் இசட்1 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் ஐவூமி இசட்1 மாடலில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இசட்1 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. 5.67 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1498 ஃபுல் வியூ நாட்ச் டிஸ்ப்ளே, குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



    ஐவூமி இசட்1 சிறப்பம்சங்கள்:

    - 5.67 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1498 ஃபுல் வியூ டிஸ்ப்ளே
    - குவாட்-கோர் மீடியாடெக் MT6739W பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஸ்மார்ட் எம்.இ. ஓ.எஸ். 3.0
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX135 சென்சார், 5P லென்ஸ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.12 மைக்ரான் பிக்சல், 4P லென்ஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
    - 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஐவூமி இசட்1 ஸ்மார்ட்போன் கிளாசிக் பிளாக், ஓசன் புளு மற்றும் பிளாட்டினம் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 11-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. துவக்க கால சலுகையாக பிளிப்கார்ட் தளத்தில் ஐவூமி இசட்1 ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஐவூமி இசட்1 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக், மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சார்பில் ரூ.2,200 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. #iVoomiZ1 #smartphone
    ஹாங் காங்கை சேர்ந்த ஐவூமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. #smartphone



    ஹாங் காங்கை சேர்ந்த மொபைல் பிரான்டு ஐவூமி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

    மிகக்குறைந்த விலையில் 18:9 ரக ஃபுல்வியூ டிஸ்ப்ளே கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. 

    மற்ற அம்சங்களை பொருத்த வரை 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே, குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர், 1 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாமல் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பிளிகப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஐவூமி ஐ ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 4.95 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6737M 64-பிட் பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்மார்ட் எம்.இ. ஓ.எஸ். 3.0
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஐவூமி ஐப்ரோ ஸ்மார்ட்போன் பிளாட்டினம் கோல்டு, இன்டி புளு, மேட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

    புதிய ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலைகளில் கிடைக்கும் சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
    ×