search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன் XS மேக்ஸ்"

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneXSRed



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் ரெட் வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது சாதனங்களை சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் இருந்து வெளியாகியுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய வடிவமைப்பில் சிவப்பு நிற எடிஷன்களாக அறிமுகமாகும் முதல் ஐபோன்களாக ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ரெட் எடிஷன்களை அறிமுகம் செய்தது.



    புதிய ரெட் எடிஷன் மூலம் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள் விற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என வெளிப்படையாக அறிவித்திருந்தது. 

    இத்துடன் சீனாவில் மட்டும் புதிய ரெட் ஐபோன்கள் சீனா ரெட் என்ற பேனரில் வெளியாகும் என கூறப்படுகிறது. மற்ற சந்தைகளில் புதிய ரெட் ஐபோன்கள் பிராடக்ட் ரெட் என்ற பேனரில் அறிமுகமாகும்.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஆப்பிள் தனது புதிய செய்தி சந்தா திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஐபோன் மாடல்களில் சார்ஜ் ஏறுவதில் கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #ChargeGate #iPhoneXS
     


    ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் சீராக சார்ஜ் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    ஆவலுடன் புதிய ஐபோன் மாடல்களை வாங்கி சென்ற ஆப்பிள் பிரியர்கள் தங்களது புதிய ஐபோன் சரியாக சார்ஜ் ஆவதில்லை, அடிக்கடி ஹேங் ஆகிறது போன்ற குற்றச்சாட்டுகளை ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மையங்கள், ரெடிட், மேக்ரூமர் படிவம், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

    புதிய ஐபோன்களில் பிரச்சனை இருப்பதை பிரபல யூடியூப் சேனலில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல யூடியூபர் லீவிஸ் ஹில்சென்டெகர் கூறும் போது, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் சார்ஜ் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டை நூற்றுக்கும் அதிகமானோர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில ஐபோன்கள் சார்ஜ் செய்யும் போது ஹேங் ஆவதாகவும், ரீசெட் செய்தால் தான் போன் இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    பிரச்சனையை புரிந்து கொள்ள ஹில்சென்டெகர் எட்டு ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை அவற்றுடன் வழங்கப்பட்ட சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தார். எட்டு ஐபோன்களில் வெறும் இரண்டு மாடல்களில் மட்டுமே சரியாக சார்ஜ் ஆனது. மற்ற ஆறு ஐபோன்களில் ஐந்து மாடல்களில் ஸ்கிரீன் வேக்கப் ஆகும் வரை சார்ஜ் ஆகவில்லை. ஒரு ஐபோன் XS மேக்ஸ் எப்படி முயன்றும் சார்ஜ் ஆகவேயில்லை, மேலும் சார்ஜ் செய்ய முயன்ற போது பலமுறை ஹேங் ஆனது. 



    ஆப்பிள் நிறுவனம் பல லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து வரும் நிலையில், பிரச்சனையை சில சோதனைகள் மற்றும் ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே உறுதி செய்ய முடியாது. குறிப்பாக சில பயனர்கள் மாற்றப்பட்ட சாதனங்களிலும் இதே பிரச்சனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

    சில பயனர்கள் தங்களது லைட்னிங் கேபிளை சற்று அசைத்தால் சார்ஜ் ஆவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இப்போதைய சூழலில் வயர்லெஸ் சார்ஜர் மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜர் பயன்படுத்தும் போது பேட்டரி ஆயுள் எளிதில் பாழாகி விடும். மேலும் ஆப்பிள் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் பேட்டரியை மாற்ற அதிக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

    தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. மேலும் பிரச்சனை மென்பொருள் அப்டேட் மூலம் சரிசெய்யப்படுமா அல்லது பெரியளவில் விற்பனையான போன்களை திரும்ப பெற்று அவை சரி செய்யப்படுமா என்ற கேள்விகளுக்கு, ஆப்பிள் விளக்கத்தை அறிந்து கொள்ள புதிய ஐபோன் வாங்கியவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

    முன்னதாக ஆப்பிள் டெக் சப்போர்ட் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, போன்களை மாற்றி வழங்க வேண்டி இருக்கும் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன் மாடல்களில் ஹார்டுவேர் கோளாறு இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

    எனினும் ஆப்பிள் இதுகுறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. #ChargeGate #iPhoneXS

    புதிய ஐபோன் கோளாறுகளை விளக்கும் பிரபல யூடியூபரின் வீடியோவை கீழே காணலாம்..,


    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன்கள் பேடிஎம் தளத்தில் ரூ.7000 வரை சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXsInIndia



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன்கள்: ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கியது.

    ஆன்லைனில் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை பயனர்கள் வாங்கிட முடியும். அந்த வகையில் பேடிஎம் மால் தளத்தில் புதிய ஐபோன்களை வாங்குவோருக்கு ரூ.7,000 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. கூடுதலாக இலவச விநியோகம் மற்றும் குறைந்த இ.எம்.ஐ. சலுகை வழங்கப்படுகிறது.

    ரூ.7000 கூடுதல் தள்ளுபடி இல்லாமல், ஐபோன் 6 பயன்படுத்துவோர் தங்களது ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.12,000 மற்றும் ஐபோன் 6எஸ் மாடலுக்கு ரூ.13,500 வரை, ஐபோன் 7 மாடலுக்கு ரூ.16,500, ஐபோன் 8 மாடலுக்கு ரூ.22,000, ஐபோன் 8 பிளஸ் மாடலுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரூ.7000 தள்ளுபடி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு ஐபோன்களை வாங்க கேலக்ஸி ஆன் 8 மாடலை எக்சேன்ஜ் செய்து ரூ.11,600 வரை தள்ளுபடியும் சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் மாடலை எக்சேன்ஜ் செய்து ரூ.12,200 வரை தள்ளுபடி பெற முடியும்.

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏ12 பயோனிக் பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் OLED டிஸ்ப்ளேக்கள், அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் XS மாடலில் 5.8 இன்ச் டிஸ்ப்ளேவும், ஐபோன் XS மேக்ஸ் மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXSMax



    ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS சீரிஸ் சுவாரஸ்ய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி இருக்கும் ஐபோன் XS மாடல்களில் உள்ள உதிரிபாகங்கள் முதல் அதில் ஆப்பிள் வழங்கி இருக்கும் சிறப்பம்சங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற பல்வேறு விவரங்களை ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கூர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

    பலகட்ட சோதனைகளை ஐபோன் XS தினந்தோரும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள உதிரி பாகங்களை ஆய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூபில் வெளியாகி வருகின்றன. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் ஐரோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டணம் சுமார் 443 டாலர்கள் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X (64 ஜிபி) வேரியன்ட் உற்பத்தி கட்டணத்தை விட வெறும் 50 டாலர்கள் மட்டுமே அதிகம் ஆகும்.

    ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மாடலின் விலை உயர்ந்த பாகமாக 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. இது ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட பெரிதாகும். இதைத் தொடர்ந்து ஏ12 சிப் விலை 72 டாலர்கள் அளவில் புதிய ஐபோனின் இரண்டாவது விலை உயர்ந்த பாகமாக இருக்கிறது.

    மூன்றாவதாக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் பாகத்திற்கு ஆப்பிள் 64 டாலர்களை செலவிடுவதாக கூறப்படுகிறது. இவற்றுடன் கேமராக்களுக்கு 44 டாலர்கள் மற்றும் இதர பாகங்களுக்கு 55 டாலர்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் X மாடலை விட பெரியது என்பதால், இதன் கட்டமைப்பு கட்டணமும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
    இந்தியாவில் புதிய ஐபோன் XS மாடல்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS



    இந்தியாவில் உள்ள ஆப்பிள் விற்பனையாளர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான இந்தியா ஐ ஸ்டோர் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் குறைந்த மாத தவணை முறையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    இம்மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XS சீரிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் ஏர்டெல், ஜியோ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரயிருக்கும் ஐபோன் XS சீரிஸ் மாடலுக்கு மாத தவணை முறை வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இவற்றை பெற பயனர்கள் தங்களுக்கான ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

    இந்தியாஐஸ்டோர் வலைத்தளத்தில் மாத தவணை முறை கணக்கீடு செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஐபோன் மாடல்களை எளிய மாத தவணை முறை வசதியில் பெற முடியும். அந்த வகையில் ஐபோன் XS (64 ஜிபி) மாடல் 24 மாதங்களுக்கு தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் மாதம் ரூ.4,499 செலுத்த வேண்டும். 



    அந்த வகையில் மாத தவணைக்கான வட்டியுடன் சேர்த்து ஐபோன் XS (64 ஜிபி) விலை ரூ.1,07,976 ஆகும். ஐபோன் XS (256 ஜிபி) மாடலுக்கு ரூ.5,175 என 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். அந்த வகையில் இதன் விலை ரூ.1,24,200 ஆகும். மாத தவணை இன்றி ஐபோன் XS (64 ஜிபி) மாடல் ரூ.99,900 மற்றும் ஐபோன் XS (256 ஜிபி) வேரியன்ட் விலை ரூ.1,14,900 ஆகும்.

    இதேபோன்று ஐபோன் XS (512 ஜிபி) மாடலை மாத தவணை முறையில் வாங்க 24 மாதங்களுக்கு ரூ.6,076 செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வட்டியுடன் சேர்த்து ஐபோன் XS (512 ஜிபி) விலை ரூ.1,45,824 ஆகும். மாத தவணையின்றி வாங்கும் போது ஐபோன் XS (512 ஜிபி) விலை ரூ.1,34,900 ஆகும்.

    மாத தவணை முறையில் ஐபோன் XS மேக்ஸ் வாங்கும் பயனர்கள் 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியன்ட்களுக்கு முறையே ரூ.4999, ரூ.5,678 மற்றும் ரூ.6,587 தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். மேலும் வட்டியில்லாமல் வாங்கும் போது ஐபோன் XS மேக்ஸ் விலை ரூ.1,09,900, ரூ.1,24,900 மற்றும் ரூ.1,44,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #iPhoneXS #iPhoneXSMax
    ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி புதிய ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #iPhoneXS #iPhoneXSMax



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. புதிய ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.

    ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் சில நிறங்கள் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்கள் ஏற்கனவே கிடைக்கிறது. 

    பிளிப்கார்ட் தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.13,500 வரை தள்ளுபடி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    பிளிப்கார்ட் போன்றே ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்திலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகள் துவங்கி இருக்கிறது. ஏர்டெல் ஸ்டோரில் இருந்து ஐபோனினை வெளியீட்டு தினத்தன்றே பெறும் வசதியும், செப்டம்பர் 28-ம் தேதி மாலை 6.00 மணி முதல் டோர் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ஜியோவின் ஆன்லைன் ஸ்டோரிலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. ஜியோ தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ஐபோன் வெளியீட்டுக்கு பின் மூன்று முதல் ஐந்து நாட்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் புதிய ஐபோன் மாடல்களை 12 மற்றும் 24 மாதங்களில் ஒரு மாத தவணை முறை வசிதயில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை செல்லுபடி ஆகும்.



    புதிய ஐபோன் மாடல்களின் விலை விவரம்:

    ஆப்பிள் ஐபோன் XS 64ஜிபி – ரூ.99,900
    ஆப்பிள் ஐபோன் XS 256ஜிபி – ரூ.1,14,900
    ஆப்பிள் ஐபோன் XS 512ஜிபி – ரூ.1,34,900
    ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 64ஜிபி – ரூ.1,09,900
    ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 256ஜிபி – ரூ.1,24,900
    ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 512ஜிபி – ரூ. 1,44,900
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் பேட்டரி மற்றும் ரேம் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXS



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனம் இம்முறையும் புதிய ஐபோன்களின் பேட்டரி மற்றும் ரேம் சார்ந்த விவரங்களை வழங்கவில்லை. இந்த விவரங்கள் சான்றளிக்கும் வலைத்தளங்கள் அல்லது டியர்டவுன் வீடியோக்களில் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் புதிய ஐபோன்களின் விவரங்கள் இம்முறை சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் X மாடலில் 2716 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது. 



    5.8 இன்ச் ஐபோன் XS மாடலில் 2658 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், 6.5 இன்ச் ஐபோன் XS மேக்ஸ் மாடலில் 3174 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஐபோன்களிலும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் ஐபோன் XR மாடலில் 2942 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்மாபர்ட்போனின் வன்பொருள் விவரங்கள் ஐஃபிக்சிட் அல்லது டெக்இன்சைட்ஸ் டியர்டவுன் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. ஐபோன் XS விலை ரூ.99,900 மற்றும் ஐபோன் XS மேக்ஸ் விலை ரூ.1,09,900 முதல் துவங்குகிறது. ஐபோன் XR விலை ரூ.76,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 26-ம் தேதி முதல் கிடைக்கும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS #iPhoneXSMax



    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.



    ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - ஐபோன் XS: 5.8-இன்ச் 2436x1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
    - ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688x1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
    - 6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
    - 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
    - ஐ.ஓ.எஸ். 12
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
    - 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
    - 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
    - 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - ட்ரூ டெப்த் கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
    - பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.

    ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ஐபோன் XR சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்
    - 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
    - 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
    - ஐ.ஓ.எஸ். 12
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
    - 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
    - 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - ட்ரூ டெப்த் கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
    - பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,860) முதல் துவங்குகிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஐபோன் XR இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXS #iPhoneXSMax
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #iPhoneXS #iPhoneXSMax



    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய மாடல்கள் முந்தைய ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் Xs மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.

    ஐபோன் Xs மேக்ஸ் மாடலில் இதுவரை வெளியானதில் பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். கிட் மூலம் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கேம் விரைவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படங்களை எடுக்க ஐபோன் XS மாடலில் 12 எம்பி டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப்செட் உதவியுடன் சிறப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய செல்ஃபிக்களை எடுக்க முன்பக்கம் 7 எம்பி ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    ஐபோன்களுக்கே உரிய கேமரா அம்சத்தை, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் புதிய பொக்கே அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் மட்டுமின்றி வீடியோக்களை படமாக்கும் போதும் முன்பை விட அதிக அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஐபோன் XS மாடலின் பேட்டரி முந்தைய மாடலை விட அதிக பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோனில் முதல் முறையாக டி.எஸ்.டி.எஸ். (டூயல் சிம், டூயல் ஸ்டான்ட்-பை) எனும் தொழில்நுட்பம் மூலம் டூயல் சிம் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஐபோன் Xs சீரிஸ் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
    ×