search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடியா"

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஏப்ரல் 2018-இல் சேர்த்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஏப்ரல் 2018-இல் சேர்த்துள்ளன. இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    ஐடியா செல்லுலார் நிறுவனம் அதிகபட்சமாக 55.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடியா செல்லுலார் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 21.67 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சேவை வழங்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 104.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இவற்றில் ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, எம்டிஎன்எல் மற்றும் டெலினார் நிறுவனங்களும் அடங்கும். என செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


    கோப்பு படம்

    இம்மாதம் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. டெலிகாம் துறையில் சீரான கனெக்டிவிட்டி நாடு முழுக்க வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ராஜன் எஸ் மேத்யூ தெரிவித்தார்.

    இந்தியாவில் 30.86 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. ஏப்ரல் 2018 காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் இந்தியா சுமார் 22.2 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களில் 12 இடங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வோடபோன் சேவையை பயன்படுத்தியதில் 2.42 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், உத்திர பிரதேசம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சலுகையின் விலை ரூ.193 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி கூடுதல் டேட்டா தினமும் பெற முடியும். இதே போன்று ரூ.49 சலுகையிலும் 1 ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். 

    தற்சமயம் ஏர்டெல் அன்லிமிட்டெட் சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆட்-ஆன் சலுகைகளை பெற முடியும். இதன் வேலிடிட்டி அன்லிமிட்டெட் சலுகைகளின் வேலிடிட்டி இருக்கும் வரை செல்லுபடியாகும். ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் ஆட்-ஆன் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரூ.193 மற்றும் ரூ.49 சலுகைகள் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படும் நிலையில் மற்ற வட்டாரங்களில் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.193 டேட்டா ஆட்-ஆன் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அன்லிமிட்டெட் சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை செல்லுபடியாகும்.

    குறிப்பிட்ட வாடிக்கையாளர் ரூ.349 விலை சலுகையை பயன்படுத்தும் பட்சத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் நிலையில், கூடுதலாக ரூ.193 விலையில் ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும் சேர்த்து தினமும் 3.5 ஜிபி டேட்டா பெற முடியும். இதே சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.199, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509 விலை சலுகைகளுக்கும் பொருந்தும்.


    கோப்பு படம்

    ஏர்டெல் சார்பில் ரூ.49 விலையிலும் புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் சலுகையுடன் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.349 சலுகையை பயன்படுத்துவோர் கூடுதலாக ரூ.49 சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா கூடுதலாக பெற முடியும்.

    முன்னதாக ஏர்டெல் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.49 விலையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். இதேபோன்று ரூ.92 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 6 ஜிபி டேட்டா சுமார் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை ரூ.11 முதல் ரூ.101 விலையில் குறைந்தபட்சம் 400 எம்பி முதல் அதிகபட்சம் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளும் அன்லிமிட்டெட் சேவைவையை வழங்குவதோடு, எவ்வித வேலிடிட்டி எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை.

    சமீபத்தில் ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ரூ.92 மற்றும் ரூ.53 விலையில் அறிவிக்கப்பட்ட சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 6 ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கும், 3 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.118 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிஎஸ்என்எல் சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.98 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சார்பில் PRBT டியூன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய சலுகையை ரீசார்ஜ் செய்ததும், இந்த சேவை தானாக ஆக்டிவேட் ஆகிவிடும். வாடிக்கையாளர்கள் இந்த டியூன்களை மாற்றும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    பிஎஸ்என்எல் புதிய ரூ.118 சலுகை சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா மற்றும் பல்வேறு இதர வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரோமிங்கின் போது மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களை தவிர்த்த பகுதிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. ஏர்டெல் ரூ.93 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா வழங்கும் ரூ.109 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழை்ப்புகள், 1 ஜிபி டேட்டா, 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கடந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
    ×