search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.சி.சி. குழு"

    • தர நிலைகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. குழு மொகாலி மைதானத்துக்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
    • கிரிக்கெட்டை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள்.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது.

    இதற்கான போட்டி அட்டவணையை கடந்த 22-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இணைந்து வெளியிட்டது.

    அகமதாபாத், ஐதராபாத், தர்மசாலா, சென்னை, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. பிரபல இடங்களான மொகாலி இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, நாக்பூர் போன்ற நகரங்கள் இதில் விடுபட்டுள்ளது.

    இதனால் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. மொகாலி மைதானம் போட்டியை நடத்த ஐ.சி.சி.யின் அளவு கோல்களை பூர்த்தி செய்ய வில்லை என்று கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜூசுக்லா தெரிவித்தார்.

    இந்தநிலையில் பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை மந்திரி குர்மீத்சிங் மீட் ஹேயர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மொகாலி மைதானம் தகுதியற்றதாக கருதப்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் அளவுகோல் என்ன என்பதை அறிய விரும்புகிறோம்.

    2022-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா-ஆஸ்திரேலியா சர்வதேச 20 ஓவர் போட்டி நடைபெற்றதால், தற்போது விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

    தர நிலைகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. குழு மொகாலி மைதானத்துக்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். மொகாலி ஸ்டேடியம், இந்தியாவின் தலை சிறந்த மைதானங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகின் முக்கிய மைதானங்களின் பட்டியலிலும் உள்ளது.

    மொகாலி எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களின் முதல் தேர்வாக உள்ளது. மொகாலியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நகரத்தில் சிறந்த உள் கட்டமைப்பு உள்ளது. அணிகள் தங்குவதற்கு போதுமான ஓட்டல்கள் உள்ளன.

    விளையாட்டு அரங்கிலும், பஞ்சாப் மாநிலம் முன்னிலையில் உள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள்.

    பஞ்சாப்பில் போட்டிகளை நடத்தவில்லை என்றால் அது நியாயமான விளையாட்டின் உணர்வை முற்றிலும் பொய்யாக்கும். எனவே பஞ்சாப்பில் சில போட்டிகளை நடத்துவது நீதியின் நலனுக்காக இருக்கும். மிக அவசரமான இந்த விஷயத்தில் பஞ்சாப்புக்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×