search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏமாற்று வேலை"

    • பெண்களை மீண்டும் விண்ணப்பிக்க சொல்வது ஏமாற்று வேலை என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
    • பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேலக்கால் கச்சராயிருப்பு, தென்கரை ஆகிய பகுதிகளில் இளைஞர் பாசறை உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவோம் என்று கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் சொல்லப்படுகிறது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்க ளில் ஏறத்தாழ 60 லட்சம் அரசின் சார்பிலே தள்ளு படி செய்யப்பட்டிருக்கிறது.

    தகுதி இல்லை என்கிற காரணத்தினால் தள்ளுபடி செய்திருப்பது பெண்களுடைய வேத னையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது. தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும் முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.

    பொதுவாக ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால் அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம்.ஏற்கனவே அரசு தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிப்பு செய்கிறது. இன்றைக்கு ஒரு கோடி ரூ.20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, 2 கோடி 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க. அரசு வழங்க முடியும்.

    தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஒரு கோடி பேருக்கு தான் வழங்குவோம் என்று ஏன் கூறவில்லை? தற்போது முதலமைச்சர் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமை தொகை திட்டத்தை வழங்கி உள்ளோம் என்று கூறி யுள்ளார். ஆனால் இதில் 50 சதவீத மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது முழுமையாக வழங்கப் பட்டது என்று முதலமைச்சர் கூறினால் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×