search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் கொள்ளையர்கள்"

    • பெண் போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டனர்.
    • ஏ.டி.எம்.-ல் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சந்தைப்பேட்டையில் இந்தியா ஒன் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவலாளி இல்லை.

    இதை குறி வைத்து ஏ.டி.எம். மையத்தில் கடந்த 21-ந்தேதி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் ஏற்காடு ஒலக்கூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 29), சேலம் குகை பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்தன் (22) ஆகியோரை போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு பிடித்து கைது செய்துள்ளனர்.

    இந்த கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    கடந்த கடந்த 21-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு கொள்ளையர்கள் லட்சுமணன், ஆனந்தன், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியை சேர்ந்த வீரமுத்து மகன் ராமர் என்கிற குட்டி பையன் (22) ஆகியோர் சந்தைப்பேட்டையில் உள்ள இந்தியா ஒன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து பெரிய இரும்பு கடப்பாரையை கொணடு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். சந்தைபேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் பெண் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம். வாசலில் யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டு கொண்டிருந்த குட்டிபையன் போலீசாரை கண்டதும் அவர் கம்பி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான்.

    மேலும் லட்சுமணன், ஆனந்தன் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்ற நிலையில் ஏ.டி.எம். முன்பு அவர்கள் தங்களது செருப்புகளை விட்டு சென்றதும், கடப்பாரை கிடந்ததும், ஏ.டி.எம். உடைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பெண் போலீசார் உடனடியாக இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பெண் போலீசார் வாக்கி-டாக்கி மூலமாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு சந்தைப்பேட்டை பகுதியில் கொள்ளையர்களை தேடினர்.

    இதனிடையே தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சந்தை பேட்டைக்கு விரைந்து வந்தார். உடனே அவர் சமயோசிதமாக செயல்பட்டு, தீவட்டிப்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு செருப்பு இல்லாமல் யாராவது வந்தால் சொல்லுங்கள் என கூறினார்.

    அப்போது ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த டிரைவர் சந்தோஷ், செருப்பு இல்லாமல் அந்த வழியாக கொள்ளையன் வேகமாக ஓடுவதை கண்டு, சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸ்காரர் சந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க துரத்திச் சென்றனர். இதில் 100 மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று கொள்ளையர்களை பிடித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு இடது கை, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் கொள்ளையர்கள் இருவரையும் தப்ப விடாமல் பிடித்தார். பின்னர் கொள்ளையர்கள் லட்சுமணன், ஆனந்தன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தார். தப்பி ஓடிய குட்டி பையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ்காரர் சந்திரன், பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா, ஆட்டோ டிரைவர் சந்தோஷ் ஆகியோரை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    பெண் போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டனர். இதனால் ஏ.டி.எம்.-ல் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது என்று ஐ.ஜி. கண்ணன் அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
    • வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து அரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காட்டிய வேகம்... வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனின் வியூகம் ஆகியவை குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு பேரூதவியாக இருந்துள்ளன.

    கடந்த 12-ந்தேதி அதிகாலையில் நடைபெற்ற கொள்ளை குறித்து காலையில்தான் போலீசுக்கு தெரியவந்தது. ஒரே நேரத்தில் 4 ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டிய கும்பல் கண்டிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிற முடிவுக்கு போலீசார் உடனடியாக வந்து விட்டனர்.

    இது போன்று கொள்ளையடிப்பவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க முடியும் என்று யூகித்த ஐ.ஜி. கண்ணன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவ்வப்போது தகவல்களை கேட்டு... கேட்டு வெளிமாநில போலீஸ் டி.ஜி.பி.க்களை தொடர்பு கொண்டு உடனுக்குடன் பேசினார். இதன்படி குஜராத், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கும் தனிப்படை விரைந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தடயவியல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினார்.

    இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அரியானா கொள்ளை கும்பல் என்பதை உறுதிபடுத்திய ஐ.ஜி.கண்ணன் மற்றும் அதிகாரிகள் குற்றவாளிகளின் செல்போன் எண்கள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். அரியானா மாநில போலீசாரின் உதவியையும் நாடினர்.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்ற ஐ.ஜி. கண்ணன் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் நெருங்கும் வரையில் அங்கேயே முகாமிட்டு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது என்று ஐ.ஜி. கண்ணன் அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

    இதன் மூலம் வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இப்படி சொல்லி அடித்தது போல ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் போலீசார் "கில்லி"யாக செயல்பட்டு சாதித்துக் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×