search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம் எந்திரம்"

    • காரைக்கால் திருநள்ளாறில் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பதிவான மர்ம நபரின் அடையாளத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூர் சௌதா நகரில் வசித்து வருபவர் ஞானசேகரன் (வயது64). இவர் காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தொடர்ந்து, அதே வங்கியில் ஏ.டி.எம் மெஷின்களுக்கு சேனல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்-ல் சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றார். பல முறை முயற்சித்தும் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்றதும், ஹைதராபாத்தில் உள்ள ஏ.டி.எம். தலைமையகம், ஞானசேகரனின் மொபைலுக்கு ஏ.டி.எம். மெஷின்களின் உடைப்பு முயற்சி குறித்து தகவல் சென்றது. தொடர்ந்து ஞானசேகரன் ஏ.டி.எம். க்கு சென்று பார்த்த போது, மர்ம நபர் மெஷினை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஞானசேகரன் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மிஷினை ஆயுதம் கொண்டு உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் அடையாளத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திடமாக காரைக்கால் நகர் பகுதியில் சுற்றித் திறந்த வாலிபரை பிடித்து விசாரித்த பொழுது, அவர் பீகார் மாநிலத்தில் சேர்ந்த ராம்லால் முஸ்தா (வயது 26) என்பதும், பீகாரிலிருந்து கட்டுமான தொழிலுக்காக காரைக்கால் வந்து, வேலை சரியாக கிடைக்காததால், ஏ.டி.எம். மிஷினை உடைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பெயரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ×